தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  One Plus Easy Upgrade: ஒரு முறை பணம் செலுத்தி பிளாக்‌ஷிப் அப்கிரேட்! ஒன்பிளஸ் அறிமுகம் செய்திருக்கும் சூப்பர் திட்டம்

One Plus Easy Upgrade: ஒரு முறை பணம் செலுத்தி பிளாக்‌ஷிப் அப்கிரேட்! ஒன்பிளஸ் அறிமுகம் செய்திருக்கும் சூப்பர் திட்டம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 03, 2024 10:05 AM IST

ஒன்பிளஸ் ஈஸி அப்கிரேட் புரோகிராம் மூலம் ஒன்பிளஸின் ஏதாவதொரு பிளாக்‌ஷிப்பை ஒரு பகுதி விலை மட்டுமே கொடுத்து பெறலாம். உங்களது சாதனத்தை புதிய ஒன்பிளஸ் ஃபிளாக்‌ஷிப் அப்கிரேடு செய்வதன் மூலம் 24 மாதங்களுக்கு பிறகு 35 சதவீதம் உத்தரவாத மதிப்பை பெறலாம்.

ஒன்பிளஸ்  பிளாக்‌ஷிப் போன்கள்
ஒன்பிளஸ் பிளாக்‌ஷிப் போன்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

கேமராவை பொறுத்தவரை 50MP பிரதான கேமரா, 48MP அல்ட்ரை வைடு கேமரா, 64MP ஆம்னிவிஷன் OV64B, பெரிஸ்கோப் டெலி போட்டோ கேமராவை கொண்டுள்ளது. செஃல்பி கேமரா 32MP ஆக உள்ளது.

50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும், 5400mAh பேட்டரியும், 100 வாட் சூப்பர் வூக் பாஸ்ட் சார்ஜிங்கும் கொண்டுள்ளது.

அத்துடன், ஆண்ட்ராய்டு 14ஐ அடிப்படையாக கொண்ட இயங்குதளத்துடன், மூன்று நிலைகள் கொண்ட அலர்ட் ஸ்லைடர் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் சிறப்பாக நான்கு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட், ஐந்து ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விலை ரூ. 64, 999இல் தொடங்கி, ரூ. 69, 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 30ஆம் தேதியில் இருந்து இதன் விற்பனை தொடங்கியுள்ளது.

இந்த ஒன்பிளஸ் 12 ஃபிளாக்‌ஷிப் போன் அப்கிரேட் தொடர்பாக அற்புத திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். அதன்படி, புதிய ஒன்பிளஸ் 12 ஃபிளாக்‌ஷிப் போன்களை 65 சதவீதம் பணம் மட்டும் செலுத்தி வாங்கிவிட்டு, அடுத்த 24 மாதத்துக்குள் புதிய ஒன்பிளஸ் ஃபிளாக்‌ஷிப் போனை அப்கிரேடு செய்து பின்னர் மீதமுள்ள 35 சதவீத தொகையை செலுத்தி கொள்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் எப்படி வேலை செய்யும்?

  • ஒன்பிளஸ் ஃபிளாக்‌ஷிப் போனை ஒரு பகுதி விலை மட்டும் செலுத்தி வாங்க வேண்டும்
  • 24 மாதத்துக்குள் இந்த தொகையை No Cost Emi திட்டத்தில் செலுத்தலாம்
  • இதன் பின்னர் பயனாளர்களுக்கு இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. ஆப்ஷன் 1ஆக, அடுத்த ஒன்பிளஸ் ஃபிளாக்‌ஷிப் போனை அப்கிரேட் செய்து கொள்வது. இதை செய்வதன் மூலம் உங்கள் சாதனத்துக்கு உரிய மதிப்பை அளிக்கப்படும். மிக முக்கியமாக இதை ஆப்ஷனை தேர்வு செய்பவர்கள் முழு தொகையும் செலுத்த வேண்டும்
  • ஆப்ஷன் 2ஆக, EMI காலத்தின் முடிவில் மீதமுள்ள பண வித்தியாசத்தை செலுத்தி உங்கள் சாதனத்தை வைத்துகொள்ளலாம்.

ஒன்பிளஸ் ஃபிளாக்‌ஷிப் போன்கள் விலை ஒப்பீடு

ஒன்பிளஸ் 12 ஃபிளாக்‌ஷிப் விலை ரூ. 69,999. ஈஸி அப்கிரேடு EMI மாதத்துக்கு ரூ. 1,989. இந்த போனுக்கான உறுதி செய்யப்பட்ட மதிப்பு ரூ. 24,500

ஒன்பிளஸ் 12R என மற்றொரு ஃபிளாக்‌ஷிப் போன்களும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் விலையானது ரூ. 45,999 எண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஈஸி அப்கிரேடு EMI மாதத்துக்கு ரூ. 1,307ஆகவும், போனுக்கான உறுதி செய்யப்பட்ட மதிப்பு ரூ. 16,100 எனவும் உள்ளது.

மேலும் பல முக்கிய நிபந்தனைகள் குறித்த தகவலுக்கு இந்த தளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்