Tamil News  /  Nation And-world  /  One Man Cycled From India To Europe To Meet His Swedish Wife
மனைவியைச் சந்திக்க ஸ்வீடன் சென்ற கணவர்
மனைவியைச் சந்திக்க ஸ்வீடன் சென்ற கணவர்

Sweden: மனைவியைக் காண இந்தியாவில் இருந்து ஸ்வீடனுக்கு சைக்கிளில் பறந்த கணவர்!

25 May 2023, 13:40 ISTManigandan K T
25 May 2023, 13:40 IST

True Love Story: பல நாட்கள் உணவின்றி தவித்திருக்கிறார். ஆனால், எதுவும் அவருக்கு மனைவியைக் காண தடையாக அமையவில்லை.

ஸ்வீடனில் உள்ள மனைவியைச் சந்திக்க 4 மாதங்களாக தினமும் 70 கி.மீ. வரை இந்தியாவில் இருந்து சைக்கிளில் பயணம் செய்திருக்கிறார் இந்தியாவைச் சேர்ந்த ஓவியர் மஹானந்தியா என்பவர்.

எப்போதோ நடந்த இந்தச் சம்பவம் தற்போது பேசுபொருளாக இந்தியாவில் மாறியிருக்கிறது.  எத்தனையோ காதல் கதைகளை படங்களில் பார்த்திருப்போம். புத்தகங்களில் படித்திருப்போம். ஆனால், இவர்களின் காதல் கதை சிலிர்ப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

1977ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார் மஹானந்தியா.

சர்லோட் வோன் சேத்வின் இந்திய ஓவியர் பி.கே.மகானந்தியாவை 1975ம் ஆண்டு டெல்லியில் சந்தித்தார். இவரது ஓவியத்தைக் காணவே டெல்லிக்கு அவர் வந்தார். அவரிடம் தன்னை ஓவியமாக வரைந்து தருமாறு கூறியிருக்கிறார். அந்த சமயத்தில் அவர் ஒரு சாதாரண ஓவியராகவே இருந்தார். டெல்லியில் கலைக் கல்லூரியில் படித்திருந்தார்.

அப்போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்தது. மகந்தியா அவரது உருவத்தை வரைந்து அளித்தார். சர்லோட் வோன் சேத்வின் ஸ்வீடன் செல்ல வேண்டி நேரிட்டபோது, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

முன்பு ஒருமுறை மகானந்தியா அளித்த நேர்காணல் ஒன்றில், "நாங்கள் திருமணம் செய்துகொள்வதற்கு முன் புடவை கட்டிக் கொண்டு எனது தந்தையை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர், எனது குடும்பத்தினரும் திருமணத்திற்கு சம்மதித்தனர். அவர் எப்படி புடவை கட்டிக் கொண்டு சமாளித்தார் என தெரியவில்லை." என்றார்.

அவர் ஸ்வீடன் செல்ல முயன்றபோது கணவரை உடன் வருமாறு அழைத்திருக்கிறார். ஆனால், முதலில் படிப்பை முடிக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

உடனவே அவர் நான் ஸ்வீடனில் போராஸ் நகரில் டெக்ஸ்டைல் டவுனில் எனது வீட்டில் இரு்பபேன். என்னிடம் நீங்கள் வந்து சேர வேண்டும் என கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.

பின்னர், இருவரும் கடிதம் வழியாக தகவலை பரிமாறிக் கொண்டிருந்திருக்கின்றனர்.

அதற்கு பிறகு, ஓராண்டு கழித்து ஸ்வீடன் செல்லலாம் என திட்டமிட்டபோது அவரிடம் விமானம் டிக்கெட் கூட வாங்க போதிய பணம் இல்லாமல் இருந்தது. இதை நினைத்து மனம் வருந்திய ஓவியர், வேறு என்னசெய்யலாம் யோசித்தபோது உதித்த ஐடியா தான் சைக்கிளில் பயணம் மேற்கொள்வது என்று முடிவு.

தன்னிடம் இருந்த அனைத்து உடைமைகளையும் விற்றுவிட்டு சைக்கிள் வாங்கியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து சைக்கிளில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், துருக்கி வழியாக ஸ்வீடன் சென்று சேர்ந்திருக்கிறார்.

இந்தப் பயணம் அவருக்கு அத்தனை எளிதாக அமைந்துவிடவில்லை. பல முறை அவரது சைக்கிளில் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. பல நாட்கள் உணவின்றி தவித்திருக்கிறார். ஆனால், எதுவும் அவருக்கு மனைவியைக் காண தடையாக அமையவில்லை.

 

1977 ஜனவரி 22 ம் தேதி தொடங்கிய பயணம், 4 மாதங்களில் நிறைவு பெற்றது. மே 28ம் தேதி அவர் ஐரோப்பா சென்றடைந்த அவர், சிறிது தொலைவுக்கு ரயிலில் பயணித்து இலக்கை அடைந்திருக்கிறார். தினமும் 70 கி.மீ. தொலைவுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். கிடைத்த இடத்தில் தூங்கி எழுந்து சென்றிருக்கிறார்.

சில இடங்களில் அவருக்கு ஓவியக் கலையே உதவியிருக்கிறது. செல்லும் வழியில் ஓவியம் வரைந்து அதன்மூலம் கிடைக்கப் பெற்ற பணத்தில் தொடர்ந்து முன்னேறி சென்றிருக்கிறார்.

பின்னர், ஸ்வீடனில் இருவரும் அந்நாட்டு முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.

தற்போது இத்தம்பதி ஸ்வீடனில் வசித்து வருகின்றனர். இவர்களின் அன்புக்கு சாட்சியாக 2 குழந்தைகள் உள்ளனர். அவர் ஓவியராகவே தனது வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

டாபிக்ஸ்