தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  One Killed, 17 Injured After Stage Collapses At An Event In Delhi's Kalkaji Mandir

Delhi: பஜனை கூட்டத்தில் மேடை சரிந்து விழுந்து விபத்து! ஒருவர் உயிரிழப்பு - 17 பேர் காயம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 28, 2024 10:15 AM IST

டெல்லியில் நடந்த பஜனை கூட்டத்தில் மேடை சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பஜனை நிகழ்ச்சியில் சரிந்து விழுந்த மேடை
பஜனை நிகழ்ச்சியில் சரிந்து விழுந்த மேடை (ANI)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சம்பவம் தொடர்பாக விடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது. அதில், மேடை முழுவதும் கூட்டம் நிரம்பியிருக்க, பாடல்கள் பாடப்பட்டது. அப்போது தரையில் இருந்த பக்தர்கள் பலர் உற்சாகமடைந்து மேடையில் ஏறியுள்ளர். இதனால் பாரம் தாங்காமல் மேடை இடிந்து விழுந்தது. இதனால் அலறியடித்தவாறு பக்தர்கள் ஆங்காங்கே சிதறி ஓடினர். இந்த விபத்து சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து தொடர்பாக போலீசார் கூறியதாவது: "இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு உரிய அனுமதி பெறவில்லை. துர்க்கை அம்மனுக்காக இரவு நேரத்தில் தூங்காமல் நடத்தப்படும் இந்த பஜனையில் பாடல்கள், நடனம் என நடந்தது. சட்ட ஒழுங்கு பாதுகாப்புக்காக போதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

மேடை இடிந்து விழுந்தது தொடர்பாக நள்ளிரவு 12.30 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றோம். இந்த விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ஒருங்கிணைப்பார்கள் மீது இந்திய தண்டனை சட்டம் ஐபிசி பிரிவு 337/304A/188 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாடகரான பி பராக், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக வருத்தத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், " என் கண்முன்னே இப்படியொரு மோசமான சம்பவம் நடந்திருப்பது இதுதான் முதல் முறை. இதனால் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளேன்.

நான் பாடல் பாடிக்கொண்டிருந்தபோது நடந்த இந்த விபத்து துர்தஷ்டவசமானது" என்ற விடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் தற்போது நன்கு தேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்