Titanic Remembrance Day: 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியான டைட்டானிக் கப்பல் மூழ்கிய சம்பவம்! இன்று 112வது ஆண்டு
உலகின் மோசமான கப்பல் விபத்தாக அறியப்பட்டும் டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கிய சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 112 ஆண்டுகள் ஆகிறது.

உலகின் மிகப் பெரிய கப்பலாக அறியப்பட்ட டைட்டானிக் தனது பயணத்தை தொடங்கி நான்காவது நாளில் எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியதில் ஏராளமான எண்ணிக்கையிலான நபர்கள் பலியானார்கள். பல்வேறு பிரபலமானவர்கள், கப்பல் கட்டிட கலைஞர்கள் உள்பட பலரும் உயிழிந்தனர்.
ஏப்ரல் 15ஆம் தேதி தான் டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கியது. இந்த நாள் டைட்டானிக் நினைவுநாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் குறிப்பிடத்தக்க கடல் பயணத்தின் வரலாற்றைப் பற்றியும், அதில் உயிர் இழந்தவர்களை நினைவுகூர்ந்தும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
டைட்டானிக் நினைவு நாள் வரலாறு
இந்த ஆண்டு 112வது நினைவு நாளாக இருந்து வருகிறது. 1912, ஏப்ரல் 15 உலகையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் நிகழ்ந்தது. தனது முதல் பயணத்தில் எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கிய கப்பலில் பயணித்தவர்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டார் பேர் உயிரிழந்தனர்.
அந்த காலகட்டத்தில் உலகின் மிகப் பெரிய கப்பலாக இருந்த டைட்டானிக் சொகுசு கப்பல் 1909 முதல் கட்டமைக்க தொடங்கப்பட்டது. இந்த கப்பலை முழுமையாக வடிவமைக்க 7,500,000 டாலர்கள் செலவழிக்கப்பட்டன. இதன் உருவாக்கத்தின்போது இரண்டு தொழிலாளிகள் தங்களது உயிரை விட்டனர்.
உலகின் மிகப் பெரிய கப்பல்
டைட்டானிக் கப்பல் 882 அடி 9 அடி, அதாவது 269.03 மீநீலமும், 92.6 அடி (28.19மீ) அகலமும் கொண்டதாக உள்ளது. இதன் உயரம் 104 அடி (32 மீ) உயரத்தை கொண்டதாக இருந்தது. இங்கிலாந்தின் செளதாம்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நாகரத்துக்கு டைட்டனிக் கப்பல் பயணத்தை தொடங்கியது
டைட்டானிக் கப்பல் மூழ்கிய சம்பவத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடமாக, மூழ்காது என்று நினைத்தாலும், போதிய அளவில் லைஃப் படகுகள் கப்பலில் எப்போதும் இருக்க வேண்டும் என்பது தான். ஏனென்றால் டைட்டானிக் கப்பலில் 64 லைஃப் படகுகள் வரை வைப்பதற்கு இடம் இருந்தபோதிலும், 20 போட்கள் மட்டும் அதில் இருந்தன.
இந்த லைஃப் படகுகளில் மூலம் சுமார் 1,100 பேர் தப்பித்துள்ளனர். ஆனால் டைட்டனிக் கப்பலில் அப்போது பயணிகள், குழுவினர் என மொத்தம் 3,300 பேர் பயணித்துள்ளனர்.
1912ஆம் ஆண்டு ஆர்.எம்.எஸ் டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் நினைவாக டைட்டானிக் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. எந்தவொரு அமைப்பாலும் இந்த நாள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஆண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதி டைட்டானிக் பேரழிவின் நினைவு நாளாக பொதுமக்கள் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
டைட்டானிக் விபத்தல் உயிர் பிழைத்தவர்களில் 700 பேர் 2009 வரை உயிருடன் இருந்த நிலையில், தற்போது உயிரிழந்துள்ளனர். டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது 2 மாத குழந்தையாக இருந்த மில்வினா டீன், அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். டைட்டானில் விபத்தில் அவரது தந்தை உயிரிழந்துவிட, அவரது சகோதரர், தாயார் ஆகியோர் லைஃப் போட்கள் மூலம் தப்பித்தனர்.
உலகையே கவலைக்குள்ளாகிய இந்த சோகமான சம்பவத்தையும், இழந்த உயிர்களை நினைவுகொள்ளவும், எதிர்காலத்தில் இதுபோன்ற துயரங்கள் நிகழாமல் தடுக்க முயற்சி செய்யவும் இந்த டைட்டானிக் நினைவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
