தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Odisha Train Accident: Humanity That Does Not Die! People Gathered For Blood Donation!

Odisha Train Accident : மரணித்துப் போகாத மனித நேயம்! குருதிக்கொடைக்கு குவிந்த மக்கள்! 3,000 யூனிட் சேகரிப்பு

Priyadarshini R HT Tamil
Jun 03, 2023 09:08 AM IST

Odisha Train Accident : ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பாலசோரில் நேற்று இரவில் மட்டும் 500 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டதாகவும், தற்போது 900 யூனிட் ரத்தம் கையிருப்பில் இருப்பதாகவும் மாநிலத்தின் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் தற்போது வரை ரயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 288ஆக அதிகரித்துள்ளதாக ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜேனா தெரிவித்துள்ளார். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 18க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பாலசோரில் நேற்று இரவில் மட்டும் 500 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டதாகவும், தற்போது 900 யூனிட் ரத்தம் கையிருப்பில் இருப்பதாகவும் மாநிலத்தின் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். பின்னர் மாலையில் அது அதிகரித்தது. மாலை வரை இளைஞர்கள் ரத்த தானம் செய்ய குவிந்த வண்ணம் இருந்தனர். மாலை வரை 3,000 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. விபத்து நடந்த இரவு நேரத்தில் இருந்து, நள்ளிரவு, அதிகாலை என ஒடிசா இளைஞர்கள் படை வந்துகொண்டேயிருந்தது. 

1999க்குப் பின்னர் இந்தியளவில் மிக மோசமான ரயில் விபத்தாக ஒடிசா பாலசோர் ரயில் விபத்து பதிவாகியுள்ளது. தற்போது வரை 288 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1999ல் அசாமின் கைசால் பகுதியில் 2,500 பேர் பயணம் செய்த 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 285க்கும் மேற்பட்ட பயணிகள் பலியானார்கள். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ரயில் விபத்தில் இதுவரை 900க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து பாலசோர், மயூர்பஞ்ச், பத்ரக், ஜாஜ்பூர் கட்டாக் மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 288 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. என்டிஆர்எஃப், ஓடிஆர்ஃப் மற்றும் தீயணைப்பு, காவல் துறை உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.

கோரமண்டல ரயில் விபத்து – உதவி எண்கள் அறிவிப்பு

ஹவுரா – 033 – 26382217

கரக்பூர் – 8972073925, 9332392339

பாலசோர் – 8249591559, 7978418322

ஷாலிமார் – 9903370746

சென்னை சென்ட்ரல் – 044 – 25330952, 044 – 25330953, 044 – 2535477

 

 

 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்