தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Odisha: Sand Artist Sudarsan Patnaik Creates Mesmerising Sand Art Of Lord Ram At Puri Beach On Diwali

Diwali: ராமர் அயோத்திக்கு வந்த நாள் இன்று! மணல் சிற்பத்தால் அசத்திய சுதர்சன் பட்நாயக்!

Kathiravan V HT Tamil
Nov 12, 2023 07:27 AM IST

”14 வருடங்கள் வனவாசம் செய்து இலங்கையின் அரசனான ராவணனை தோற்கடித்த பிறகு ராம பிரான் சீதை மற்றும் லக்‌ஷ்மணருடன் அயோத்திக்கு திரும்பிய தினமே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது”

தீபத்தை கையில் ஏந்திய படி உருவாக்கப்பட்டுள்ள ராமரின் மணல் சிற்பம்
தீபத்தை கையில் ஏந்திய படி உருவாக்கப்பட்டுள்ள ராமரின் மணல் சிற்பம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்துக்களின் புனிதப் பண்டிகையான தீபாவ, தீபங்களின் திருவிழா நாடு முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவை பொறுத்தவரை, 14 வருடங்கள் வனவாசம் செய்து இலங்கையின் அரசனான ராவணனை தோற்கடித்த பிறகு ராம பிரான் சீதை மற்றும் லக்‌ஷ்மணருடன் அயோத்திக்கு திரும்பிய தினமே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.

தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியையும் இருளுக்கு எதிராக ஒளியின் வெற்றியையும் தீபாவளி குறிக்கிறது. இந்த நேரத்தில், மக்கள் விநாயகர் மற்றும் லட்சுமி போன்ற கடவுள்களையும் தெய்வங்களையும் வணங்குகிறார்கள்.

இதனை குறிக்கும் விதமாக ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள கடற்கரையில் ராமரின் மணல் சிற்பத்தை மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கி உள்ளார்.

"தீபாவளியை முன்னிட்டு, மணலில் மிகப்பெரிய சிற்பத்தை உருவாக்கி, தீபாவளி வாழ்த்துச் செய்தியுடன், நாட்டு மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இங்கு ராமர் சிற்பத்தையும் உருவாக்கி உள்ளோம். ராமர் கோவில். அயோத்தியில் தீபாவளிக்கு பிறகு திறப்பு விழா நடைபெறும்" என்று சுதர்சன் பட்நாயக் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

பட்நாயக் தனது தனித்துவமான திறமையால் மக்களை மயக்குவது இது முதல் முறை அல்ல. பல சமயங்களில், பல்வேறு இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் அற்புதமான மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

WhatsApp channel

டாபிக்ஸ்