தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  No End To Gujarat Cong Woes As Another Mla Quits On Nyay Yatra Entry Eve; 4th In 3 Months

Gujarat: ’துயரத்திற்கு முடிவே இல்லையா!குஜராத்தை நெருங்கும் ராகுல் யாத்திரை’ ஜம்ப் அடித்த அடுத்த எம்.எல்.ஏ!

Kathiravan V HT Tamil
Mar 06, 2024 08:24 PM IST

”பாரத் நியாய் யாத்திரை குஜராத்தை நெருங்கும் நிலையில் இதுவரை 4 எம்,எல்,ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்”

பாரத் நியாய் யாத்திரை குஜராத்தை நெருங்கும் நிலையில் இதுவரை 4 எம்,எல்,ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.
பாரத் நியாய் யாத்திரை குஜராத்தை நெருங்கும் நிலையில் இதுவரை 4 எம்,எல்,ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள மானவதார் தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்.எல்.ஏவாக வென்ற அரவிந்த் லதானி பாஜகவில் சேர உள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி நடத்தி வரும் பாரத் நியாய் யாத்திரை குஜராத் மாநிலத்தை நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் பதவி விலகும் நிகழ்வுகள் தொடர்ந்து வருகின்றன. 

காங்கிரஸ் கட்சித் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா அமைப்பில் இருந்து வெளியேறினார். லதானி தனது ராஜினாமா கடிதத்தை குஜராத் சட்டமன்ற சபாநாயகர் சங்கர் சவுத்ரியின் காந்திநகரில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அளித்தார். பின்னர் தனது சட்டமன்ற தொகுதியை மேம்படுத்த ஆளும் கட்சியுடன் இருப்பது அவசியம் என்றும் அவர் கூறினார். லதானியின் ராஜினாமாவை சவுத்ரி ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் அலுவலகம் உறுதி செய்தது. 

இந்த புதிய பின்னடைவால், 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபையில் காங்கிரஸின் பலம் 13 ஆகக் குறைந்துள்ளது. 

மிக விரைவில் பாஜகவில் சேர உள்ளதாகவும், மானவதாரிலிருந்து இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் லதானி கூறி உள்ளார். 

2022 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வெற்றி பெற்ற 17 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் லதானியும் ஒருவர். மூன்று மாத கால இடைவெளியில் கட்சிக்கு விடைபெற்ற நான்காவது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக லதானி உள்ளார். 

இரண்டு நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ.வும், குஜராத் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான அர்ஜுன் மோத்வாடியா அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்து செவ்வாய்க்கிழமை பாஜகவில் இணைந்தார். 

அவருக்கு முன், காம்பத் எம்எல்ஏ சிராக் படேல் மற்றும் விஜாப்பூர் எம்எல்ஏ சிஜே சாவ்தா ஆகியோரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். 

காங்கிரஸின் முன்னாள் மாநில செயல் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான அம்பரீஷ் டெர் மற்றும் ராஜ்யசபா எம்பி நரன் ரத்வா ஆகியோரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி உள்ளனர். 

IPL_Entry_Point