Nitish Kumar: மணிப்பூரில் பாஜக அரசுக்கான ஆதரவு வாபஸ்.. நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சி முடிவு.. ஆட்சிக்கு பாதிப்பா?
Nitish Kumar: மணிப்பூரில் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வாபஸ் பெற்றுள்ளது
Nitish Kumar: மணிப்பூர் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக கூட்டணிக் கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு) வாபஸ் பெற்றுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் சட்டப்பேரவையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு முகமது அப்துல் நசீர் மட்டுமே எம்.எல்.ஏ.வாக உள்ளார். மணிப்பூர் சட்டமன்றத்தில் ஐக்கிய ஜனதா தளம் ஆரம்பத்தில் ஆறு எம்.எல்.ஏ.க்களைக் கொண்டிருந்தது, ஆனால் செப்டம்பர் 2022 இல், அவர்களில் ஐந்து பேர் ஆளும் கட்சியில் ஒன்றிணைந்து பாஜகவில் இணைந்தனர்.
மணிப்பூரில் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவது என்ற ஐக்கிய ஜனதா தளத்தின் முடிவு அதிகாரப்பூர்வ கடிதம் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தின் மணிப்பூர் தலைவர் க்ஷேத்ரிமயம் பிரேன் சிங், மணிப்பூரில் பாஜக தலைமையிலான மாநில அரசாங்கத்தை கட்சி இனி ஆதரிக்காது என்று அறிவித்தார்.
"மணிப்பூரில் பாஜக தலைமையிலான மாநில அரசை ஐக்கிய ஜனதா தளம் ஆதரிக்கவில்லை என்பதையும், எங்கள் ஒரே எம்.எல்.ஏ முகமது அப்துல் நசீர் சபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக கருதப்படுவார் என்பதையும் இதன் மூலம் மீண்டும் வலியுறுத்துகிறோம்" என்றார்.