Chennai: சென்னையில் பதுங்கி இருந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவன்.. பொறி வைத்து பிடித்த என்.ஐ.ஏ!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Chennai: சென்னையில் பதுங்கி இருந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவன்.. பொறி வைத்து பிடித்த என்.ஐ.ஏ!

Chennai: சென்னையில் பதுங்கி இருந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவன்.. பொறி வைத்து பிடித்த என்.ஐ.ஏ!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 06, 2023 04:01 PM IST

சென்னையில் பதுங்கி இருந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரை என்.ஐ. ஏ அதிகாரிகள் கைது செய்து இருக்கிறார்கள்.

என்.ஐ.ஏ அதிகாரிகள்
என்.ஐ.ஏ அதிகாரிகள்

அவரை பிடிப்பதற்காக களத்தில் சில வாரங்களாக பணியாற்றிக்கொண்டிருந்த என்.ஐ. ஏ வின் Fugitive Tracking குழு இவரை கையும் களவுமாக பிடித்திருக்கிறது. 

விசாரணையில் கைதானவர் என்.ஐ.ஏ சையது நபீல் அகமது என்பது தெரிய வந்திருக்கிறது. இவர் கர்நாடகா, தமிழ்நாடு என பல்வேறு இடங்களில் பதுங்கி இருந்து போலியான ஆவணங்களைக்கொண்டு நேபாளத்தில் இருந்து வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்திருக்கிறது.

ஜூலை மாதம் முதல், கொச்சியின் என்ஐஏ பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்றாவது குற்றவாளியான சையத் நபீலிடம் இருந்து முக்கிய குற்றவியல் ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த  ஜூலை மாதம், தமிழ்நாட்டின் சத்தியமங்கலம் அருகே ஆஷிப் என்ற தீவிர வாதியை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.