Tamil News  /  Nation And-world  /  Nia Arrested 106 Pfi Members Across 11 States After Conducting Raids
நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டதில் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டதில் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

NIA raids: நாடு முழுவதும் 106 பிஎஃப்ஐ நிர்வாகிகளை கைது செய்த என்ஐஏ

22 September 2022, 20:26 ISTMuthu Vinayagam Kosalairaman
  • Share on Twitter
  • Share on FaceBook
22 September 2022, 20:26 IST

இரண்டு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளை கைது செய்துள்ள என்ஐஏ அலுவலர்கள், அவர்களை விசாரணைக்காக தில்லி அழைத்து சென்றுள்ளனர்.  இதுவரை நாடு முழுவதும் 106 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் 15 மாநிலங்களில், 93 பகுதிகளில் இருக்கும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அவர்களின் அலுவலகங்களில் தேசிய புலானாய்வு முகமை அமைப்பான என்ஐஏ சோதனை மேற்கொண்டது. இதில் தீவிரவாதம் மற்றும் அதுதொடர்பான செயல்களுக்கு நிதி அளித்தது, பொதுமக்களிடையே தீவிரவாதம் ஊக்குவிப்பது தொடர்பாக ஈடுபடுதல் போன்றவிற்றில் ஈடுபட்டதாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ட்ரெண்டிங் செய்திகள்

ஆந்திராவில் 5, அஸ்ஸாமில் 9, தில்லியில் 3, கர்நாடகாவில்20, கேரளாவில் 22, மத்திய பிரதேசத்தில் 4, மகாராஷ்ட்ராவில் 20, புதுச்சேரியில் 3, ராஜ்ஸ்தானில் 2, தமிழ்நாட்டில் 10, உத்தர பிரதேசத்தில் 8 இடங்களில் 106 பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்கள் என்ஐஏ, அமலாக்க துறையின் கூட்டாக இணைந்து சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் ஒரு பகுதியாக கோவையில் உள்ள கரும்புகடை பகுதியில் அமைந்துள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் சோதனை நடைபெற்றது. இதன் பின்னர் இஸ்மாயிலை விசாரணைக்காக என்ஐஏ அலுவலர்கள் தில்லி அழைத்து சென்றார்கள்.

இதேபோல் கர்நாடக மாநில பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா செயலாளர் சாதிக் முகமது தனது உதவியாளருடன் கோவை வந்தபோது அவரை ரயில் நிலையத்தில் வைத்து என்ஐஏ அலுவலர்கள் பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சாதிக் முகமது உதவியாளர் விடுவிக்கப்பட்டார். ஆனால் விசாரணைக்காக சாதிக் அகமது, இஸ்மாயில் ஆகியோரை என்ஐஏ அலுவலர்கள் தில்லிக்கு அழைத்து சென்றனர். தில்லியில் அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

  • Share on Twitter
  • Share on FaceBook