தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  New Whatsapp Beta Feature Prohibits Taking Screenshots Of Profile Pictures; Know What Is In Store

WhatsApp New Feature: இனி ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாது - பாதுகாப்பு அம்சத்தை பலப்படுத்தும் வாட்ஸ்அப்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 24, 2024 09:50 AM IST

புரொபைல், டிபி புகைப்படங்களை ஸ்க்ரீன்ஷாட் எடுப்பதை தடுக்கும் விதமாக பீட்டா டெஸ்டிங்கில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது.

பயனாளரின் பாதுகாப்பு அம்சத்தை அதிகரிக்கு வாட்ஸ் அப்
பயனாளரின் பாதுகாப்பு அம்சத்தை அதிகரிக்கு வாட்ஸ் அப் (REUTERS)

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் வாட்ஸ்அப் பயனாளர் தனது புரொபைல், டிபி புகைப்படங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் விதமாக ஸ்க்ரீன்ஷாட் மூலம் அதை பிரதி எடுப்பதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பயனாளரின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக இந்த பரிசோதனை முயற்சியானது பீட்டா டெஸ்டிங்கில் இருந்து வருகிறது.

வாட்ஸ்அப் பீட்டா அப்டேட்

முன்னதாக, மற்றவர்களின் புரொபைல் புகைப்படங்களை சேமிக்கும், டவுண்லோடு செய்யும் ஆப்ஷன்களை செயலிழக்க செய்திருந்தது. ஆனாலும் ஸ்மார்ட் போன்களின் இருக்கும் ஸ்க்ரீன்ஷாட் உதவியுடன் இந்த புகைப்படங்களை பிரிதி எடுக்கும் வாய்ப்பு பயனாளர்களுக்கு இருந்து வந்தது. தற்போது அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக ஸ்க்ரீன்ஷாட் கூட எடுக்கமுடியாத அளவில் பாதுகாப்பு அம்சத்தை பலப்படுத்துகிறது.

தற்போது அமல்படுத்தப்படும் இந்த புதிய அப்டேட் மூலம் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முயற்சித்தால் இந்த செயல்பாடு தடை செய்யப்பட்டிருப்பதாக வார்னிங் மெசேஜ் தோன்றும். இதன் மூலம் பாதுகாப்பில் கூடுதல் அடுக்கு பெறப்படுகிறது. இதன் மூலம் அங்கீகாரம் இல்லாத பயனாளர்கள் அனுமதியின்றி புகைப்படங்களை பிரதி எடுப்பதை தடுக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்