Tamil News  /  Nation And-world  /  New Parliament Should Be Inaugurated By The President, Pil Filed At Supreme Court
புதிய நாடளுமன்ற கட்டிடம்
புதிய நாடளுமன்ற கட்டிடம்

New Parliament Building: புதிய நாடாளுமன்றக் கட்டடம்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

25 May 2023, 15:14 ISTKarthikeyan S
25 May 2023, 15:14 IST

New Parliament Building: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் மட்டுமே திறக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 28 ஆம் தேதி திறந்து வைக்கிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளன. அதோடு சுமார் காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் இந்த விழாவை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளன.

இந்தச் சூழலில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்ட்டுள்ளது. இந்த வழக்கை வழக்கறிஞர் சி.ஆர் ஜெய சுகின் என்பவர் தாக்கல் செய்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறப்பது தொடர்பாக மக்களவை செயலகத்துக்கு ‘வழிகாட்டுதல் அல்லது ஆலோசனை’ வழங்க வேண்டும் என நீதிமன்றத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 18ஆம் தேதி மக்களவை செயலக ஜெனரல் வெளியிட்ட அறிக்கையில் வரும் 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த விழாவிற்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு கூட கொடுக்கப்படவில்லை. இதன் மூலம் மக்களவை செயலகம் அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயலில் ஈடுபட்டுள்ளது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் 96 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக, 'சென்டிரல் விஸ்டா' என்ற பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு பிரதமர் மோடி இந்த புதிய கட்டிடப் பணிக்கான அடிக்கல்லை நாட்டினார். புதிய கட்டிடம் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், முக்கோண வடிவில் அமைந்து உள்ளது. மக்களவையில் 888, மாநிலங்களவையில் 384 என இருக்கைகள் அமைகின்றன. இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் வருகிற 28ஆம் தேதி திறக்கப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்