Kerala: நடிகர் மீது இளம்பெண் பாலியல் புகார் - விசாரணை தொடரும் - நீதிமன்றம் அதிரடி
கதை சொல்ல வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகர் உன்னி முகுந்தன் பேரில் கொடுக்கப்பட்ட வழக்கில் புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகர்களில் ஒருவர் உன்னி முகுந்தன். மலையாள நடிகர் தமிழில் தனுஷ் நடித்து வெளியான சீடன் திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான மாளிகப்புரம் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில், இவர் மீது கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், "தன்னை படத்தில் நடிக்க வைப்பதாகவும் கதையைக் கேட்க தனது வீட்டுக்கு வருமாறு உன்னுடன் அழைத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும்" காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வாழ்த்த பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது குறித்து நடிகர் உன் முகுந்தன் சார்பில் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தனக்கு 25 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் உங்கள் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறுகிறேன் என அந்த பெண் நிர்ப்பந்தம் செய்ததாகவும் எனவே இந்த வழக்கு ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை அடுத்து 1 முகுந்தனுக்கு எதிரான வழக்கு விசாரணையை நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் அந்த இளம் பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் கண்டு விட்டதாகவும் ஒன்று முகுந்தன் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்து வழக்கு விசாரணையைத் தடை செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் இது குறித்து அந்த பெண், சமரசத் தேர்வு ஏதும் ஏற்படவில்லை என்றும் நடிகர் உன்னை முகுந்தன் தொடர்ந்து தன்னை அவமானப்படுத்துவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட உயர் நீதிமன்றம், நடிகர் உன் முகுந்தன் கொடுத்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் அவருக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கும் எனத் தெரிவித்துள்ளது.