New India Assurance: நியூ இந்தியா அஷ்யூரன்ஸில் 300 உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் 300 உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் 300 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப செயல்முறை பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கும் மற்றும் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு பிப்ரவரி 15 ஆகும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் www.newindia.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆட்சேர்ப்பு காலியிடங்கள்: இந்த ஆட்சேர்ப்பு இயக்கம் 300 உதவியாளர் காலியிடங்களை நிரப்ப நடத்தப்படுகிறது.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் மாநிலம் / யூனியன் பிரதேசத்தின் பிராந்திய மொழியைப் பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
www.newindia.co.in இல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்
முகப்புப் பக்கத்தில், ஆட்சேர்ப்பு டேபை கிளிக் செய்யவும்
அடுத்து, application இணைப்பைக் கிளிக் செய்யவும்
விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்
தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்
படிவத்தை சமர்ப்பித்து எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
விரிவான அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் www.newindia.co.in இல் கிடைக்கும்.
டாபிக்ஸ்