HBD Nethaji: ‘தேவரின் தலைவர்…!’ நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் செய்த சம்பவங்கள்!
”அவரது மரணம் இன்று வரை விடை தெரியாத புதிராகவே நீடிக்கிறது. ஆனால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரோடு உள்ளதாகவும், நிச்சயம் திரும்பி வருவார் என்றும் பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் பல கூட்டங்களில் பேசினார்”
வங்கத்தில் வழக்கறிஞராக திகழ்ந்த ஜானகி நாத் போஸ், பிரபாவதி தேவி தம்பதியின் 9 ஆவது குழந்தையாக 1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி பிறந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிறுவயதில் இருந்தே விவேகானந்தரின் ஆன்மீக கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
தனக்கு 5 வயதான போது, கட்டாக் பகுதியில் உள்ள பாப்டிஸ்ட் மிசன் ஆரம்பப் பள்ளியில் தனது கல்வியை தொடங்கினார். ஏழு ஆண்டுகள் அங்கு கல்வி பயின்றார். பின்னர், தன் உயர் கல்வியை கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் பயின்றார்.
1913 ஆம் ஆண்டில் நடந்த தேர்வில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 2 ஆவது மாணவராக சுபாஷ் சந்திர போஸ் தேர்வானார்.
தற்போது ஐஏஸ் எனப்படும் இந்திய குடிமைப்பணி தேர்வுகள் விடுதலைக்கு முந்தைய காலத்தில் ஐசிஎஸ் என்று அழைக்கப்பட்டது. இந்த தேர்வை இந்தியாவில் எழுத முடியாது என்பதால் லண்டனுக்கு சென்று தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
ஆனால் அன்றைக்கு நாட்டையும், மக்களையும் சுரண்டிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசுக்கு கீழ் கலெக்டராக பணியாற்ற விரும்பாத போஸ் பட்டம் வாங்காமலேயே தாயகம் திரும்பினார்.
இந்தியாவில் விடுதலைத் தாகம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நேரத்தில் சி.ஆர்.தாஸ் மூலம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அறவழியில் அமைதியான முறையில் போராடத் தொடங்கினார்.
போராட்டங்கள் அவரை சிறைச்சாலைகளுக்கு கொண்டு சென்றது. நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது.
1938ஆம் ஆண்டில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் காந்தி ஆதரித்த வேட்பாளரையும் தாண்டி, அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் அவரை தலைவர் என்று பொருள்படும் நேதாஜி என அழைக்கத் தொடங்கினர்.
இந்திய விடுதலையை அகிம்சை முறையில் பெற முடியும் என்ற காந்தியின் கொள்கைகளில் இருந்து நேதாஜி மாறுபடத் தொடங்கினார்.
அடக்குறையை ஆயுதப்போராட்டத்தின் மூலம் மட்டுமே வெல்ல முடியும் என நம்பிய அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
இந்திய விடுதலைக்காக பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான நாடுகளின் ஆதரவை பெற செகோஸ்லோவாக்கியா, ஹங்கேரி, போலந்து இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு பயணித்தார்.
அப்போது ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலி என்பவருடன் நேதாஜிக்கு காதல் ஏற்பட்டது. 1937 ஆம் ஆண்டு டிசம்பர் 27அஅம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 1942 ஆம் ஆண்டு அனிதா போஸ் என்ற மகள் பிறந்தார்.
இந்திய விடுதலைக்காக பார்வடு பிளாக் என்ற அமைப்பை தொடங்கினார். அதன் அகில இந்திய தலைவராக நேதாஜியும், தமிழக தலைவராக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் இருந்தனர்.
இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக மக்களை திரட்டும் பணியில் நேதாஜி ஈடுபட்டார். இதனால் பிரிட்டீஷ் அரசு நேதாஜியை சிறையில் அடைத்தது.
சிறையில் உண்ணா விரத போராட்டத்தை நேதாஜி தொடங்கினார். அவரது உடலுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் இந்திய மக்கள் கிளர்ந்தெழுவர் என அஞ்சியது ஆங்கிலேயர்கள் அஞ்சினர்.
இதனால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நேதாஜி 1941ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி மாறுவேடத்தில் இந்தியாவில் இருந்து தப்பினார்.
சாயதீன் என்ற பெயரில் ரயிலில் இரண்டாம் வகுப்பில் பயணித்த நேதானி ஜனவரி 17ஆம் தேதி பெஷாவர் சென்ற அவர் பின்னர் வெளிநாடுகளுக்கு தப்பினார்.
இந்தியாவை பிரிட்டீஷ் ஆளுகையின் கீழ் இருந்து விடுவிக்க ஜெர்மன் இத்தாலி ஜப்பான் ஆகிய நாடுகளின் உதவியை கோரினார். சிங்கப்பூரில் 4000 வீரர்களை கொண்ட இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்தார். இந்தியாவை நோக்கிய என்.ஐ.ஏவின் படையெடுப்பு தோல்வி அடைந்த நிலையில்,
பாங்காங் சென்ற நேதாஜி தென் வியட்நாமில் உள்ள சைகோன் நகருக்கு விமானம் மூலம் சென்றார். அவருடன் அபிபூர் ரஹ்மான், தமிழர் எஸ்.ஏ.ஐயர் ஆகியோர் சென்றனர்.
விமானம் சைக்கோன் விமான தளத்தில் இறங்கியது அங்கு ஜப்பான் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அதில் ஒருவருக்கு மட்டுமே இடம் உள்ளது. அதில் நேதாஜி மட்டும் வரலாம் என விமானத்தில் இருந்த ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் விமானத்தில் ஏறி அமர்ந்தார். இதையடுத்து அபிபூர் ரஹ்மான் அந்த விமானத்தில் செல்ல ஜப்பான் அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.
ஆனால் அதுதான் சுபாஷ் சந்திர போஸ் இறுதி பயணமா என்பது இன்று வரை மர்மாக உள்ளது. பின்னர் ஆகஸ்ட் 19ஆம் தேதி விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டதாக ஜப்பான் ரேடியோ மூலம் அறிவித்தது.
அதில் சுதந்திர இந்தியாவின் தற்காலிக தலைவர் நேதாஜி 1945 ஆகஸ்ட் 16ஆம் தேதி ஜப்பான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த புறப்பட்டார். 18ஆம் தேதி விமானம் விபத்துக்குள்ளானதில் அவர் இறந்து விட்டார் என அறிவித்தது.
அவரது மரணம் இன்று வரை விடை தெரியாத புதிராகவே நீடிக்கிறது. ஆனால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரோடு உள்ளதாகவும், நிச்சயம் திரும்பி வருவார் என்றும் பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் பல கூட்டங்களில் பேசினார்.
டாபிக்ஸ்