Naveen Patnaik: ’என் உடல்நிலை நன்றாக உள்ளது பிரதமரே!’ மோடிக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பதில்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Naveen Patnaik: ’என் உடல்நிலை நன்றாக உள்ளது பிரதமரே!’ மோடிக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பதில்!

Naveen Patnaik: ’என் உடல்நிலை நன்றாக உள்ளது பிரதமரே!’ மோடிக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பதில்!

Kathiravan V HT Tamil
May 29, 2024 10:06 PM IST

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் மேடையில் பேசும் போது, நடுங்கும் அவரது கையை பிடித்து கேமராவில் இருந்து மறைக்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான வி.கே.பாண்டியனின் வீடியோ வைரல் ஆனது. ஒடிசா முதலமைச்சரை வி.கே.பாண்டியன் கட்டுப்படுத்துவதாக பாஜகவினர் குற்றம்சாட்டி பரப்புரையில் ஈடுபட்டனர்.

Naveen Patnaik: ’என் உடல்நிலை நன்றாக உள்ளது பிரதமரே!’ மோடிக்கு நவீன் பட்நாயக் பதில்!
Naveen Patnaik: ’என் உடல்நிலை நன்றாக உள்ளது பிரதமரே!’ மோடிக்கு நவீன் பட்நாயக் பதில்! (PTI)

ஒடிசாவில் பேசு பொருள் ஆன பட்நாயக்கின் உடல்நிலை

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை குறித்த ஊகங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியது ஊடகங்களில் பேசு பொருள் ஆனது. 

ஒடிசா முதலமைச்சர்  நவீன் பட்நாயக் மேடையில் பேசும் போது, நடுங்கும் அவரது கையை பிடித்து கேமராவில் இருந்து மறைக்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான வி.கே.பாண்டியனின் வீடியோ வைரல் ஆனது. ஒடிசா முதலமைச்சரை வி.கே.பாண்டியன் கட்டுப்படுத்துவதாக பாஜகவினர் குற்றம்சாட்டி பரப்புரையில் ஈடுபட்டனர். 

மோடிக்கு நவீன் பட்நாயக் பதில்

இந்த நிலையில் தனது உடல்நிலை தொடர்பான வதந்திகளை எதிர்த்த நவீன் பட்நாயக், "நரேந்திர மோடி முன்பு என்னுடைய நல்ல நண்பர் என்று கூறிய அவர், நரேந்திர மோடி செய்ய வேண்டியதெல்லாம் தொலைபேசியை எடுத்து என்னை அழைத்து எனது உடல்நிலை குறித்து என்னிடம் கேட்பதுதான்" என்று நவீன் பட்நாயக் கூறினார். 

கடந்த 10 ஆண்டுகளாக அவரது உடல்நிலை குறித்து பாஜகவினர் வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்ற அவர், “தான் பூரண உடல் நலத்துடன் இருப்பதாகவும், கடந்த ஒரு மாதமாக மாநிலத்தில் பிரசாரம் செய்து வருகிறேன். எனது உடல்நிலை நன்றாக உள்ளது. இல்லையெனில், இந்த கடுமையான வெயிலுக்கு மத்தியில் என்னால் பிரச்சாரம் செய்திருக்க முடியாது" என்று பட்நாயக் கூறினார்.

மயூர்பஞ்ச் மற்றும் பாலசோரில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசுகையில், நவீன் பட்நாயக்கின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றார். இது ஒரு மர்மம் என்று கூறிய பிரதமர் மோடி, பட்நாயக்கின் உடல்நிலை மோசமடைந்ததற்கான காரணங்களைக் கண்டறிய தனது அரசாங்கம் ஒரு குழுவை அமைக்கும் என்றார். "இதன் பின்னணியில் சதி உள்ளதா? தற்போது பட்நாயக் அரசை அவர் சார்பாக நடத்தும் லாபி தான் இதற்கு காரணமா?"  என்றும் மோடி கேள்வி எழுப்பினார். 

நவீன் பட்நாயக்கும், வி.கே.பாண்டியனும்

77 வயதான நவீன் பட்நாயக் இம்முறை தேர்தலில் வெற்றி பெற்றால் நாட்டிலேயே அதிக காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையை பெறுவார்.  

பிஜேடி கட்சியை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான வி.கே.பாண்டியன், நவீன் பட்நாயக் உடனான நெருக்கத்தால் ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் முக்கிய பேசு பொருள் ஆகி உள்ளார். 

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட வி.கே.பாண்டியன், ஒடிசா கேடரின் 2000-பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக அவர் பணியாற்றினார். அவரது மனைவி ஒடிசாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒடிசா சட்டமன்றத் தேர்தல் 

ஒடிசாவில் மே 13ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று, ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

நாடாளுமன்றத் தேர்தல் 2024:

இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடந்து முடிந்தது.

இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் கடந்த மே 7ஆம் தேதியும், மே 13ஆம் தேதி அன்று நான்காம் கட்ட தேர்தலும் நடந்து முடிந்தது.

வரும் மே 20ஆம் தேதி அன்று 5ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவும், மே 25ஆம் தேதி அன்று 6ஆம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்ற முடிந்த நிலையில், வரும் ஜூன் 1ஆம் தேதி அன்று 7ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Whats_app_banner
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.