National Sports Day: உடல், மன ஆரோக்கியத்துக்கு முக்கியமாக இருக்கும் விளையாட்டு! தேசிய விளையாட்டு தினம் வரலாறு
National Sports Day 2024: மனிதனின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு முக்கியமாக இருந்து வரும் விளையாட்டு. இதை கொண்டாடுவதற்கு என தனியாக நாள் ஒன்றும் ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டு தினம் வரலாறு, முக்கியத்துவம், கருபொருள் போன்ற விஷயங்களை பார்க்கலாம்.
தேசிய விளையாட்டு தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய ஹாக்கி விளையாட்டின் ஜாம்பவான் வீரரான மேஜர் தயான் சந்த் பிறந்தநாளான இந்தியாவின் தேசிய விளையாட்டு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
மனிதனின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு விளையாட்டு என்பது முக்கியமான செயலாக உள்ளது. ஏதாவது விளையாட்டை விளையாடும் நபர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.இந்தியா சார்பில் விளையாட்டு உலகில் ஏராளமான ஜாம்பவான்கள் இருக்கிறார்கள்.
ஓட்டப்பந்தயத்தில் பிடி உஷா, கிரிக்கெட்டில் சச்சின் டென்டுல்கர், ஹாக்கி விளையாட்டில் மேஜர் தயான் சந்த் உள்பட ஏராளமானார் இந்திய சார்பில் உலக அரங்கில் விளையாட்டு உலகில் புகழ் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
தேசிய விளையாட்டு தினம் வரலாறு
இந்தியாவில் முதல் தேசிய விளையாட்டு தினம் ஆகஸ்ட் 29, 2012 அன்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் பிறந்த மேஜர் தயான் சந்த் பிறந்தநாளை விளையாட்டு தினம் குறிக்கிறது. இந்திய விளையாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவரது பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக இந்திய அரசு அறிவித்தது.
ஹாக்கி வழிகாட்டி மற்றும் வித்தைக்காரர் என்று பரவலாக அறியப்படும் மேஜர் தயான் சந்த் ஆகஸ்ட் 29, 1905இல் பிறந்தார். இந்திய ராணுவத்தில் மேஜராக இருந்து வந்த இவர், இந்தியாவுக்காக 185 சர்வதேச ஹாக்கி போட்டிகளில் விளையாடி 400க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார்.
தேசிய விளையாட்டு தினம் 2024: முக்கியத்துவம்
தேசிய விளையாட்டு தினத்தின் முதன்மை குறிக்கோள் ஆக விளையாட்டின் முக்கியத்துவம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதாகும்.
தேசிய விளையாட்டு தினத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகள், நிகழ்வுகள், கருத்தரங்குகள் போன்றவற்றையும் ஏற்பாடு செய்கிறது. எஃப்ஐடி இந்தியன் இணையதளத்தின்படி, விளையாட்டு மதிப்புகள், ஒழுக்கம், விடாமுயற்சி, விளையாட்டு வீரர் மனப்பான்மை மற்றும் குழுப்பணி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
மேலும் விளையாட்டில் ஈடுபட பொதுமக்களை ஊக்குவிக்கவும், அதை ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றவும் அவர்களின் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அதே வேளையில் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த நாள் உள்ளது
தேசிய விளையாட்டு தினம் கொண்டாட்டம்
தேசிய விளையாட்டு தினம் நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஒவ்வொரு ஆண்டும் ராஷ்டிரபதி பவனில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, நாட்டின் சிறந்த வீரர்களுக்கு இந்திய ஜனாதிபதி விளையாட்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை வழங்குகிறார்.
தேசிய விளையாட்டு விருதின் கீழ், விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது மற்றும் துரோணாச்சார்யா விருது போன்ற விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.
அதேபோல் அனைத்து மரியாதைகளுடன், விளையாட்டு உலகின் இந்தியாவின் உயரிய விருதாக கருதப்படும் "தயான் சந்த் விருது" இந்த நாளில் வழங்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்