தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  National Girl Child Day : தேசிய பெண் குழந்தைகள் தினம்; கருப்பொருள், வரலாறு மற்றும் முக்கியத்துவம்!

National Girl Child Day : தேசிய பெண் குழந்தைகள் தினம்; கருப்பொருள், வரலாறு மற்றும் முக்கியத்துவம்!

Priyadarshini R HT Tamil
Jan 24, 2024 07:33 AM IST

National Girl Child Day : தேசிய பெண் குழந்தைகள் தினம்; கருப்பொருள், வரலாறு மற்றும் முக்கியத்துவம்!

National Girl Child Day : தேசிய பெண் குழந்தைகள் தினம்; கருப்பொருள், வரலாறு மற்றும் முக்கியத்துவம்!
National Girl Child Day : தேசிய பெண் குழந்தைகள் தினம்; கருப்பொருள், வரலாறு மற்றும் முக்கியத்துவம்!

ட்ரெண்டிங் செய்திகள்

பெண்கள் அவரிகளின் உரிமைகளை தெரிந்துகொள்ள வேண்டும். கல்வி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் பெற வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். 

பாலியல் சமத்துவம் இல்லாத சமூகத்தில் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் தனி சவால்களை அங்கீகரிக்க ஒரு முக்கிய படியை இந்த நாள் குறிக்கிறது. குறைவான கல்வி மற்றும் ஆரோக்கயிம், குழந்தை திருமணம், பாலின ரீதியான வன்முறைகள் உள்ளிட்ட பிரச்னைகள் இவை குறித்து நாம் தலையிடவேண்டிய அவசியமும், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்ய வேண்டிய நிலையும் உள்ளது. 

இதனால், இந்த நாளை 2008ம் ஆண்டு முதல் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் ஜனவரி 24ம் தேதி முன்னெடுக்கிறது.

பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களை பலப்படுத்துவது இந்த ஆண்டின் முக்கிய இலக்காக இருக்கும் என்ற கருப்பொருளை கொண்டுள்ளது.

பெண்கள் பல்வேறு நிலைகளிலும் முன்னேறி உள்ளார்களா என்பதைதான் இந்த நாளில் சுட்டிக்காட்ட விரும்புகிறது. பெண்களின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் சமத்துவம் என அனைத்திலும் பெண்கள் முன்னேறியிருக்க வேண்டும் என்பதுதான் இந்த நாளின் முக்கியத்துவம்.

பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்படவேண்டும்

ஒவ்வொரு பெண்ணும், அவர்களின் பின்னணி மற்றும் சூழ்நிலை பாகுபாடின்றி கல்வி கற்கும் உரிமை பெற்றவர்கள். ஆரோக்கியம் பெறும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. மேலும் அவர்களுக்கு தேவையான பொருட்களை பெறும் உரிமையும் கட்டாயம். தடைகளை உடைப்பதை இந்த நாள் கோடிட்டு காட்டுகிறது. அவர்களையும் அடக்கிய வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது.

பெண்களை முன்னேற்றுவது சமூகத்தை முன்னேற்றுவது

பெண்கள் கல்வி பெற்று முன்னேறியிருந்தால், அவர்கள் மாற்றத்தின் காரணிகளாகிறார்கள். அவர்கள் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கிறார்கள். வறுகையை ஒழிக்கிறார்கள். வளமான எதிர்காலத்திற்கு பாதை வகுக்கிறார்கள்.

சவால்களும், நம்பிக்கைகளும்

பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் சவால்கள் இருந்தாலும், அவற்றை அங்கீகரிக்கும் நாளாக தேசிய பெண்கள் தினம் உள்ளது. இதன்மூலம் அந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்கிறது.

பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள், கருத்தரங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்படும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் பெண் குழந்தைகளின் உரிமைகள் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படும். அதில் பாலின சமத்துவம், பாகுபாடுகளை களைவது மற்றும் பெண்களுக்கு எதிராக வன்முறைகளை தடுப்பது குறித்து வலியுறுத்தப்படும்.

பெண்கள் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட சவால்கள் குறித்து அரசு முன்னெடுப்புக்களை மேற்கொள்ளும். கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பான சூழல் ஆகியவற்றை அவர்கள் பெறுவதில் உள்ள சிக்கல்கள் போன்றவை பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களாக உள்ளன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெண் முன்னேற்றத்துக்கு என்ன செய்துள்ளன என்று இந்த நாளில் வெளிகாட்டிக்கொள்ள பயன்படுத்திக்கொள்வார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்