Sunita Williams: நாசா வெளியிட்ட போட்டோவில் தேகம் மெலிந்து காணப்பட்ட சுனிதா வில்லியம்ஸ்!
டிசம்பர் 17 அன்று அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் படத்தை நாசா பகிர்ந்துள்ளது. படத்தில், அவர் சிவப்பு சாண்டா தொப்பி மற்றும் சிவப்பு டி-ஷர்ட் அணிந்திருப்பதைக் காணலாம்.

நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மற்றொரு நாசா விண்வெளி வீரர் டான் பெட்டிட்டின் படத்தை அமெரிக்க விண்வெளி நிறுவனம் வெளியிட்டதை அடுத்து நெட்டிசன்கள் அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்தனர்.
சுனித வில்லியம்ஸ் சுமார் ஆறு மாதங்களாக விண்வெளியில் இருக்கிறார், அடுத்த ஆண்டு பூமிக்கு திரும்புவதற்காக காத்திருக்கிறார். அவரும் அவரது சக ஊழியர் புட்ச் வில்மோரும் ஜூன் மாதம் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் எட்டு நாட்கள் விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்க வேண்டும். இருப்பினும், செப்டம்பர் மாதம் ஸ்டார்லைனர் அதன் குழுவினர் இல்லாமல் திரும்ப வேண்டியிருந்ததால் அவர்களின் விண்வெளி நேரம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், டிசம்பர் 17 அன்று சுனிதா வில்லியம்ஸின் போட்டோவை நாசா பகிர்ந்துள்ளது. அதில், அவர் சிவப்பு சாண்டா தொப்பி மற்றும் சிவப்பு டி-ஷர்ட் அணிந்திருப்பதைக் காணலாம்.