Narendra Modi: நரேந்திர மோடி 3-வது முறையாக ஜூன் 9-ம் தேதி மாலை 6 மணிக்கு பிரதமராக பதவியேற்பு - பிரகலாத் ஜோஷி தகவல்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Narendra Modi: நரேந்திர மோடி 3-வது முறையாக ஜூன் 9-ம் தேதி மாலை 6 மணிக்கு பிரதமராக பதவியேற்பு - பிரகலாத் ஜோஷி தகவல்

Narendra Modi: நரேந்திர மோடி 3-வது முறையாக ஜூன் 9-ம் தேதி மாலை 6 மணிக்கு பிரதமராக பதவியேற்பு - பிரகலாத் ஜோஷி தகவல்

Marimuthu M HT Tamil Published Jun 07, 2024 12:45 PM IST
Marimuthu M HT Tamil
Published Jun 07, 2024 12:45 PM IST

Narendra Modi: பாஜக தலைவர் பிரகலாத் ஜோஷி அறிவித்தபடி, நரேந்திர மோடி ஜூன் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார் எனக் கூறினார்.

Narendra Modi:  நரேந்திர மோடி 3-வது முறையாக ஜூன் 9-ம் தேதி மாலை 6 மணிக்கு பிரதமராக பதவியேற்பு - பிரகலாத் ஜோஷி தகவல்
Narendra Modi: நரேந்திர மோடி 3-வது முறையாக ஜூன் 9-ம் தேதி மாலை 6 மணிக்கு பிரதமராக பதவியேற்பு - பிரகலாத் ஜோஷி தகவல் (HT_PRINT)

டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய பிரகலாத் ஜோஷி, மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்கிறார் என்றும்; பதவியேற்பு விழா வரும் ஜூன் 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார். 

பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மையப் பகுதிக்கு பிரதமர் மோடி:

பிரதமர் மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருந்த பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் கூடியிருந்த தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்களிடம் ஜோஷி இந்த தகவலைத் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள், முதலமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர். 

இந்தக் கூட்டத்தின்போது பழைய நாடாளுமன்ற மண்டபத்துக்கு இடையே வந்த பிரதமருக்கு, பாஜக எம்.பிக்கள் மற்றும் அவரது கூட்டணி கட்சி எம்.பிக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதன்பின், மண்டபத்தின் மையப் பகுதிக்கு வந்த பிரதமர் மோடி அங்கு வைக்கப்பட்டிருந்த, அரசியல் சாசனப் புத்தகத்தை தலையில் ஒற்றி, வணங்கி மரியாதை செலுத்தினார்.

மோடியின் தலைமைக்கு ஆதரவாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். அதை கூட்டணி கட்சிகள் மற்றும் எம்.பி.க்கள் வழிமொழிந்தார்கள். 

பிரதமரை வாழ்த்திய பாஜக தலைவர்கள்:

நாடாளுமன்றத்தை அடைந்ததும், நாகாலாந்து முதல்வர் நெய்பியூ ரியோ, "நான் ஏற்கனவே அவரை (பிரதமர் மோடி) அவரது மூன்றாவது பதவிக்காலத்திற்கும், மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கும் வாழ்த்தினேன்" என்று கூறினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களில் ஒருவரான கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், "கோவாவில் எங்களால் ஒரு இடத்தை மட்டுமே வெல்ல முடிந்தது. மற்ற தொகுதிகளிலும் எங்களால் வெற்றி பெற முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது" என்றார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களின் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தெலுங்கு தேசம் கட்சியின் என்.சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் மற்றும் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே போன்ற முக்கிய கூட்டணி உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடனான சந்திப்புக்கு பிரதமருடன் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடியை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை அவரிடம் வழங்குவார்கள்.

கூடுதலாக, சிராக் பாஸ்வான், ஜிதன் ராம் மாஞ்சி, அனுப்பிரியா படேல் மற்றும் பவன் கல்யாண் போன்ற பிற தேசிய ஜனநாயகத் தலைவர்கள் பாஜக மூத்த தலைவர்களுடன் பிரதான மேடையில் கலந்து கொண்டனர். 293 எம்.பி.க்களைக் கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி, 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் பெரும்பான்மையைப் பெற உதவும் 272 மக்களவை உறுப்பினர்களைத் தாண்டி வென்றுள்ளது. 

வளர்ந்த இந்தியாவை உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணி பாடுபடும் என்று பிரதமர் மோடி பின்னர் கூறினார். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களிலும், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களிலும் வெற்றி பெற்று, பாஜகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளன.

இந்திய கூட்டணிக்கு 234 எம்.பி.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 99 எம்.பி.க்களும் உள்ளனர்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.