தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Narayana Murthy: ஏன் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என சொன்னேன்! இன்போசிஸ் நாராயண மூரத்தி காரணத்துடன் விளக்கம்

Narayana Murthy: ஏன் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என சொன்னேன்! இன்போசிஸ் நாராயண மூரத்தி காரணத்துடன் விளக்கம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 06, 2024 03:54 PM IST

வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய இளைஞர்கள் முன் வர வேண்டும் என சொன்னதற்கான காரணம் குறித்து இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி
இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி

ட்ரெண்டிங் செய்திகள்

இவரது இந்த பேச்சுக்கு எதிர்ப்புகளும், விமர்சனங்களும் கிளம்பியதுடன் உலக அளவில் பேசுபொருளானது. இதற்கிடையே நாரயண மூர்த்தி பேச்சுக்கு சில ஆதரவு குரல்களும் ஒலித்தன.

இதையடுத்து சிஎன்பிசி டிவி18க்கு அளித்த பேட்டியில், 70 மணி நேரம் பணி செய்ய வேண்டும் என்று சொன்னதற்கான பின்னணி காரணத்தை விவரித்துள்ளார். இதுதொடர்பாக நாரயண மூர்த்தி கூறியதாவது: "என்னை விட வேறு யாராக இருந்தாலும் அவர்களது துறையில் என்னைவிட சிறப்பாக செயல்பட்டால் நான் அவர்களை மதிப்பேன். இந்த பகுத்தறிவுடன் நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது.

மேற்கத்திய நாடுகளை சேர்ந்த எனது நண்பர்கள், என்ஆர்ஐக்கள், எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பலரும் 60 அல்லது 70 மணி நேரமாக இருந்தாலும் பிரச்னை இல்லாமல் தாங்கள் மகிழ்ச்சியாகவே இருப்பதாக தெரிவித்தார்கள்.

இந்திய நாட்டில் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதையை இங்கு பார்க்க வேண்டும். ஏனென்றால் இங்கு ஏழை விவசாயியும் இங்கு கடினமாக உழைக்கிறார். ஒரு ஆலை தொழிலாளியும் கடினமாக உழைக்கிறார். அவர்களுக்காக நாமும் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். இதை செய்தால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.

கல்விக்காக இங்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. கல்விக்காக மானியங்களை வழங்குவதற்கு அரசாங்கத்துக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். என் விஷயத்தில், எனக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து உதவித்தொகை கிடைத்தது. எனவே, மிகவும் கடினமாக உழைக்க, இந்தியாவின் வசதி குறைந்த குடிமக்களுக்கு கடமைப்பட்டிருக்கிறோம்."

இவ்வாறு அவர் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.