Bullet Train: மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில்: ஏலத்தில் முக்கிய 4 நிறுவனங்கள்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Bullet Train: மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில்: ஏலத்தில் முக்கிய 4 நிறுவனங்கள்!

Bullet Train: மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில்: ஏலத்தில் முக்கிய 4 நிறுவனங்கள்!

HT Tamil Desk HT Tamil
Published Apr 13, 2023 09:36 AM IST

Mumbai-Ahmedabad bullet train: லார்சன் & டூப்ரோ, NCC-J.Kumar, Afcons-KPTL Consortium மற்றும் Dineshchandra-DMRC ஆகிய நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றுள்ளன.

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் கட்டுமானப் பணிகள்
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் கட்டுமானப் பணிகள் (PTI)

லார்சன் & டூப்ரோ(L&T), NCC-J.Kumar, Afcons-KPTL Consortium மற்றும் Dineshchandra-DMRC ஆகிய நிறுவனங்கள் ஏலத்தை சமர்ப்பித்துள்ளதாக புல்லட் ரயில் திட்டத்தை கையாளும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதையின் (புல்லட் ரயில் திட்டம்) மொத்த செலவு ரூ.1.08 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

புல்லட் ரயில் திட்ட அறிக்கையில், தேசிய அதிவேக இரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) M/s லார்சன் & டூப்ரோ லிமிடெட், NCC-J குமார் (JV), M/s Afcons -KPTL கூட்டமைப்பு மற்றும் M/s தினேஷ்சந்திரா- ஆகிய நிறுவனங்களிடமிருந்து நான்கு ஏலங்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தானே, விரார் மற்றும் போயிசர் HSR (அதிவேக ரயில்) நிலையங்களையும் உள்ளடக்கிய தொகுப்பு C-3க்கான பணிகளாகும்.

புல்லட் ரயில்
புல்லட் ரயில் (HT_PRINT)

அதிவேக ரயில் பாதையின் ஷில்பாடா-ஜரோலி பிரிவு மகாராஷ்டிரா மற்றும் குஜராத் எல்லையில் அமைந்துள்ளது. "தொழில்நுட்ப மதிப்பீடு முடிந்ததும் தொழில்நுட்ப ரீதியாக தகுதி பெற்ற ஏலதாரர்களின் நிதி ஏலங்கள் திறக்கப்படும்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதை என்பது இந்தியாவின் பொருளாதார மையமான மும்பையை அகமதாபாத் நகரத்துடன் இணைக்கும் கட்டுமானத்தில் உள்ள அதிவேக ரயில் பாதையாகும். இது நிறைவடையும் போது, ​​இந்தியாவின் முதல் அதிவேக ரயில் பாதையாக இது அமையும்.

அதிவேக ரயில் (HSR) திட்டம், ஒரு தொழில்நுட்ப அற்புதம் தவிர, பயண நேரத்தை மிச்சப்படுத்துதல், வாகன இயக்கச் செலவு, மாசு குறைப்பு, வேலை உருவாக்கம், விபத்துக்களைக் குறைத்தல், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் மாற்றீடு போன்ற பல அளவிடக்கூடிய நன்மைகளை வழங்கும். மேலும் மாசுபாடுகளை குறைக்கும்.