TATA motor with indian bank: டாடா மோட்டார்ஸ் துணை நிறுவனங்கள் – இந்தியன் வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Tata Motor With Indian Bank: டாடா மோட்டார்ஸ் துணை நிறுவனங்கள் – இந்தியன் வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

TATA motor with indian bank: டாடா மோட்டார்ஸ் துணை நிறுவனங்கள் – இந்தியன் வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Published Oct 14, 2023 01:13 PM IST

டாடா மோட்டார்ஸ் பாஸஞ்சர் வெஹிக்கிள்ஸ் லிமிடெட் (TMPVL) மற்றும் டாடா பாஸஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் (TPEML) ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருப்பதை பிரபல பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி இன்று அறிவித்திருக்கிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்
புரிந்துணர்வு ஒப்பந்தம்

டாடா மோட்டார்ஸ் லிமிடெட் –க்கு முற்றிலும் சொந்தமான துணை நிறுவனங்களாக இயங்கி வரும் டாடா மோட்டார்ஸ் பாஸஞ்சர் வெஹிக்கிள்ஸ் லிமிடெட் (TMPVL) மற்றும் டாடா பாஸஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் (TPEML) ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருப்பதை பிரபல பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி இன்று அறிவித்திருக்கிறது. இந்த கூட்டுவகிப்பு செயல்பாட்டின் கீழ் மின்சார வாகனங்களுக்கும் மற்றும் பிற எரிபொருட்களைப் பயன்படுத்தும் பயணியர் வாகனங்களுக்கும் தனது டிஜிட்டல் வழங்கல் சங்கிலித்தொடர் நிதிக்கான (SCF) செயல்தளத்தின் வழியாக TMPVL & TPEML நிறுவனங்களின் அங்கீகாரம் பெற்ற டீலர்களுக்கு சரக்கிருப்பு (இன்வென்ட்ரி) நிதித்தீர்வை இந்தியன் வங்கி வழங்கும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட இந்நிகழ்வின்போது பேசிய இந்தியன் வங்கியின் செயலாக்க இயக்குனர்  அசுடோஷ் சௌத்ரி, “இந்தியாவின் ஆட்டோமோட்டிவ் துறையில் முதன்மை வகிக்கும் டாடா மோட்டார்ஸ் உடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். புதுயுக மின்சார வாகனங்கள் உட்பட, பயணியர் வாகனங்களுக்கு விரிவான விருப்பத்தேர்வுகளின் தொகுப்பை டாடா மோட்டார்ஸ் நம் நாடெங்கிலும் வழங்கி வருகிறது. சிறந்த பாரம்பரியம் கொண்ட டாடா மோட்டார்ஸ் -க்கு நிகராக 5819 கிளைகளுடன் 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் ஆழமான நம்பிக்கையைப் பெற்றிருக்கும் இந்தியன் வங்கி, டாடா மோட்டார்ஸ் லிமிடெட் – க்கு (TML) அதன் அதிவேக வளர்ச்சி பயணத்திற்கு துணை நிற்க சிறப்பான நிதித்தீர்வுகளை வழங்க முழு தகுதியையும், திறனையும் கொண்டிருக்கிறது. 

டாடா மோட்டார்ஸ் – ன் டீலர்களுக்கு அவர்களது பிசினஸ் வளர்ச்சியை மேலும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வதற்காக சாதகமான வரையறைகளில் நடப்பு மூலதன (ஒர்க்கிங் கேப்பிட்டல்) நிதிக்கு எளிதான அணுகுவசதியை இந்தியன் வங்கியின் சப்ளை - செயின் ஃபைனான்ஸ் (SCF) வழங்கும்.” என்று கூறினார்.

டாடா மோட்டார்ஸ் டீலர்களுக்கு அவர்களது இன்வென்ட்ரி நிதிக்கான செலவீனங்களை இந்தியன் வங்கியின் சப்ளை – செயின் ஃபைனான்ஸ் செயல்தளம் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கும் என்று இந்தியன் வங்கியின் CMS பிரிவின் தலைவர் திரு. சௌரப் டால்மியா குறிப்பிட்டார். இந்த டிஜிட்டல் செயல்தளமானது, பரிவர்த்தனைகள், கடனை திரும்பச் செலுத்தும் செயல்பாடுகள், நிலுவையிலுள்ள தொகை, வட்டி மற்றும் பிற கட்டணங்களை எளிதாகவும், மற்றும் வெளிப்படைத் தன்மையோடும் பார்வையிடவும் மற்றும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் டாடா மோட்டார்ஸ் டீலர்களுக்கு திறனதிகாரத்தை வழங்கும்.

டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெஹிக்கிள் லிமிடெட் – ன் துணைத் தலைவர் ரமேஷ் துரைராஜன், இந்தியன் வங்கியுடனான இந்த ஒத்துழைப்பு நடவடிக்கை குறித்து பேசுகையில் கூறியதாவது: “எமது அங்கீகாரம் பெற்ற பயணியர் வாகன டீலர்களுக்கு இந்த நிதியுதவி செயல்திட்டத்திற்காக பிரபல வங்கியான, இந்தியன் வங்கியுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம். பயணியர் வாகனங்கள், பசுமை போக்குவரத்தில் அதிக அளவிலான விருப்பத்தேர்வுகளை வழங்க வேண்டும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக நிலைப்புத்தன்மையை மேலும் வலுப்படுத்த வேண்டுமென்ற இலக்கை அடைவது என்ற எமது தொலைநோக்கு திட்டத்திற்கு, இந்தியன் வங்கியின் இந்த நிதி ஆதரவு முன்னெடுப்பு மேலும் ஆதரவளிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.”

தனது டிஜிட்டல் SCF செயல்தளத்தின் வழியாக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான (MSME) நிதி வழங்கல் செயல்பாட்டை மேலும் மேம்படுத்த வேண்டுமென்ற குறிக்கோளை நோக்கிய பயணத்தில் இந்தியன் வங்கி எடுத்து வைத்திருக்கும் மற்றொரு மிகப்பெரிய நடவடிக்கையாக இன்று கையெழுத்திடப்பட்டிருக்கும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் திகழ்கிறது.

இந்தியன் வங்கியின் வழங்கல் சங்கிலித்தொடர் நிதி பிரிவின் துணைப்பொது மேலாளர் மனோரஞ்சன் உபாத்யாய், டாடா மோட்டார்ஸ் பாஸஞ்சர் வெஹிக்கிள்ஸ் லிமிடெட் – ன் பொது மேலாளர்  சௌரப் ராய், துணை பொது மேலாளர் அனில்குமார் ஷர்மா மற்றும் துணை பொது மேலாளர் விஷால் ஜாதவ் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.