தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Mother Who Killed Her Son And Daughter In Uttar Pradesh

Crime: கவுன்சிலருடன் காதல் - குழந்தைகளைக் கொலை செய்த தாய்!

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 25, 2023 05:40 PM IST

உத்திர பிரதேசத்தில் தனது காதலுக்காகச் சொந்த மகனையும் மகளையும் தாய் ஒருவர் கொலை செய்துள்ளார்.

கொலை
கொலை

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் உத்திர பிரதேச மாநிலத்தில் தனது காதலுக்குத் தொந்தரவாக இருந்த குழந்தைகளைத் தாய் ஒருவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உபதேச மாநிலம் மீரட் பகுதியில் உள்ளூர் உறுப்பினராக சவுத் என்பவர் இருந்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் உறவில் இருந்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் அடிக்கடி தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இவர்களின் உறவுக்கு அந்தப் பெண்ணின் பத்து வயது மகனும் மற்றும் ஆறு வயது மகளும் தொந்தரவாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த பெண் தனது கவுன்சிலர் காதலன் மற்றும் சிறுவர்கள் உதவியோடு இரு குழந்தைகளையும் கொலை செய்துள்ளார். அது மட்டுமல்லாது அவர்களின் உடலை அருகே இருந்த கால்வாயில் வீசி எரிந்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் அக்கம்பக்கத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். தற்போது இரண்டு குழந்தைகளும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கால்வாயில் வீசப்பட்ட குழந்தைகளின் உடலானது தற்போது வரை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்துக் காவல் கண்காணிப்பாளர் பியூஷ் சிங் கூறுகையில்," மார்ச் 22 ஆம் தேதி அன்று தனது பத்து வயது மகன் மற்றும் 6 வயது மகளைக் கொலை செய்து அவர்களது உடல்களை அந்த குழந்தைகளின் தாய் மற்றும் அவரது கவுன்சிலர் காதலர் இருவரும் கால்வாயில் வீசியுள்ளனர்.

சொந்த வீட்டில் அந்த சிறுமியும், பக்கத்து வீட்டில் அந்த சிறுவனும் கொல்லப்பட்டுள்ளனர். கால்வாயில் வீசப்பட்ட அந்த குழந்தைகளின் உடல் இன்னும் மீட்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்