Mother Teresa : பல அவமானங்கள் சோதனைகள் கடந்து தொண்டு செய்தவர் அன்னை தெரசா.. அன்பின் ஒட்டுமொத்த உருவம்!
மக்களின் மனதில் அன்போடும்,கருணையோடும் போற்றபடுபவர் அன்னை தெரசா. இவரது புகழ் இம்மண்ணுலகம் இருக்கும் வரை போற்றப்படும்.

அன்னை தெரசா
அடிப்படையில் கிறிஸ்தவ மத அமைப்பின் கன்னியாஸ்திரி சேவையில் ஈடுபட்டாலும் பிற்காலத்தில் அனைத்து வகையான மக்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து உலகப் புகழ் பெற்றவர் அன்னை தெரசா.
1910-ஆம் ஆண்டு ஆகஸ்ட்26 ஆம் தேதி தென் கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா. இவர் எட்டு வயதில் தனது தந்தையை இழந்தார். இவருக்கு படிப்பில் ஆர்வம் அதிகம் அவரது பாடபுத்தகத்தில் எந்த பாடப்பகுதியை கேட்டாலும் தடையின்றி சொல்லும் அளவுக்கு வல்லமை படைத்தவர்.
இவருக்கு சிறுவயதிலிருந்தே பொதுதொண்டில் மிகுநத ஆர்வம் கொண்டு இருந்தார். இவர் 18 வயதில் ஐரிஸ் கன்னிகாஸ்திரிகளை கொண்ட லொரேட்டா கத்தோலிக்க கன்னிகா மடத்தின் உறுப்பினராக இருந்தார்.