Emirates flight: வெறும் 2 பேருடன் சென்ற எமிரேட்ஸ் விமானம்-எங்கு தெரியுமா?
தாய்-மகள் இருவரும் மட்டும் சீஷெல்ஸில் இருந்து சுவிட்சர்லாந்து செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்தனர்.
ஒரு தாயும் மகளும் விடுமுறைக்காக எமிரேட்ஸ் விமானத்தில் ஏறியபோது அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. சீஷெல்ஸில் இருந்து சுவிட்சர்லாந்து சென்ற விமானத்தில் எகானமி கிளாஸ் கேபினில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர்.
25 வயதான ஜோ டோயல் மற்றும் அவரது தாயார் கிம்மி சேடல் (59) ஆகியோர் டிசம்பர் 25 ஆம் தேதி விடுமுறையைக் கழிக்க விமானத்தில் ஏறியபோது அவர்கள் மட்டும் அங்கு இருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.
"நாங்கள் மட்டும்தான் இருக்கிறோம் என்று எங்களுக்குத் தெரியாது. மேலும் நான்கு பேர் முதல் வகுப்பில் இருந்தனர் என்று நான் நினைக்கிறேன், ஆனால் அவர்களது கேபின் தனி. எனவே நாங்கள் மட்டுமே இருந்தோம்" என்று அவர்கள் தெரிவித்தனர்.
"இது சீஷெல்ஸில் மழைக்காலம் என்பதாலும், கிறிஸ்துமஸ் தினம் என்பதாலும், யாரும் விமானத்தில் பயணிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.
முதலில் டிக்டாக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், டோயல் வெற்று விமானத்தில் நடனமாடுவதைக் காட்டுகிறது. அந்த வீடியோவில் கேபின் க்ரூ உறுப்பினர் ஒருவர் தனது தலைக்கவசத்தை செடல் மீது அணிவதைக் காட்டுகிறது. வீடியோவில், "பிஓவி: நீங்கள் மட்டுமே விமானத்தில் இருக்கிறீர்கள்" என்று எழுதப்பட்டுள்ளது.
அந்த வீடியோவை இங்கே பாருங்கள்:
டோயல் மற்றும் செடல் ஆகியோரும் விமானத்தை சுற்றிப்பார்த்தனர், ஆனால் முதல் வகுப்பில் அனுமதிக்கப்படவில்லை. "விமான பணிப்பெண்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக இருந்தனர், அது காலியாக இருந்தது. அதுபோன்று ஒருபோதும் நடக்காது என்று கூறினார்கள். நாங்கள் முதல் வகுப்பில் அனுமதிக்கப்படவில்லை என்றாலும், விமானத்தில் ஒரு சிறிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டோம். ரொம்ப ஜாலியாக இருந்தது. நாங்கள் விமானப் பணிப்பெண்களுடன் அரட்டையடித்து, அவர்களுடன் வேடிக்கையான வீடியோக்களைப் படமாக்கினோம்" என்று டோய்லை தெரிவித்தார்.
டாபிக்ஸ்