Top 10 News: நடிகர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை, வடகிழக்கு பருவமழை.. மேலும் முக்கிய செய்திகள்!
Top 10 News, September 19, 2023: உள்ளூர் முதல் உலகம் வரை, தேசம் முதல் தமிழகம் வரையிலான இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு
வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
வட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. திருவள்ளூரில் பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்திப் பேச தடை விதிக்க கோரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மனு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா (16) மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னையில் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மீரா மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது.
தேசம்
நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும், வரலாற்று சிறப்புமிக்க மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடப்பு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரிலேயே மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பிக்கள் உடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெக்காவத்தை அமைச்சர் துரைமுருகன் இன்று காலை சந்தித்து பேசுகிறார்.
உலகம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் கட்சிப் பாடல்களின் மெட்டுக்களைத் திருடி பாடல்கள் அமைத்து தோ்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவதாக பாஜக, காங்கிரஸ் பரஸ்பரம் குற்றம்சாட்டினா்.
விளையாட்டு
ஸ்வீடன், சுவிட்சர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் ஸ்பெயின் மகளிர் கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆண்கள் கால்பந்து விளையாட்டின் குரூப் சுற்றில் இந்தியா - சீனா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்