Amit Shah About Modi: ‘2029ஆம் ஆண்டுக்கு பின்னும் நரேந்திர மோடிதான் தலைவர்!’ அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதிலடி!
“கெஜ்ரிவால்ஜி, உங்களுக்கு எந்த நல்ல செய்தியும் இல்லை. 2029க்குப் பிறகும், மோடிஜி எங்கள் தலைவர். அவரது தலைமையில் நாங்கள் தேர்தலில் போட்டியிடுவோம் என அமித்ஷா கூறி உள்ளார்”

‘2029ஆம் ஆண்டுக்கு பின்னும் மோடிதான் தலைவர்!’ கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதிலடி! (ANI)
வரும் 2029ஆம் ஆண்டுக்கு பிறகும் நரேந்திர மோடிதான் பாஜகவை வழிநடத்துவார் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.
2029 ஆம் ஆண்டிலும் மோடிதான்!
இது தொடர்பாக பேசி அவர், "நான் மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன், மோடிஜி 2029ஆம் ஆண்டு வரை இருப்பார். மேலும் கெஜ்ரிவால்ஜி, உங்களுக்கு எந்த நல்ல செய்தியும் இல்லை. 2029க்குப் பிறகும், மோடிஜி எங்கள் தலைவர். அவரது தலைமையில் நாங்கள் தேர்தலில் போட்டியிடுவோம்," என்று கூறினார்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதிலடி
அமித் ஷா சமீபத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு பத்து உத்தரவாதங்களை அறிவித்ததையும் விமர்சித்தார், மேலும் ஆம் ஆத்மி கட்சி 22 லோக்சபா தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவதால், ஆம் ஆத்மி தலைவரின் கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.