தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Mehbooba Mufti Meets With Car Accident In Jammu And Kashmir

Mehbooba Mufti: நொறுங்கிய கார்.. விபத்தில் சிக்கிய முன்னாள் முதல்வா்!

Karthikeyan S HT Tamil
Jan 11, 2024 06:05 PM IST

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சென்ற கார் இன்று பிற்பகல் விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சென்ற கார்.
விபத்துக்குள்ளான ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சென்ற கார்.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த விபத்தில் முப்திக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றபோதிலும், அவரது தனிப்பட்ட பாதுகாப்பில் இருந்த காவல் அதிகாரி ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த விபத்தில் முப்தியின் வாகனம் கடுமையாக சேதமடைந்தது. விபத்து பகுதியில் இருந்து கிடைத்த படங்களில் மெகபூபா சென்ற காரின் பானட் நொறுங்கிப் போயிருப்பதைக் காணமுடிகிறது. இருப்பினும் அவர் மற்றொரு காரில் தனது திட்டமிடப்பட்ட பயணத்தை மேற்கொண்டு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து முப்தியின் மகள் இல்திஜா முப்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மெகபூபா பயணம் செய்த கார் அனந்த்நாக் பகுதியில் இன்று பயங்கர விபத்துக்குள்ளானது. கடவுளின் கருணையால் அவரும் அவரது பாதுகாவலரும் பெரிய காயங்களின்றி உயிர் தப்பினர்" என்று தெரிவித்துள்ளார்.

முப்தி பாதுகாப்பாக இருப்பதாகவும், அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து தேசிய மாநாட்டு கட்சியின் ஓமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மிகவும் மோசமான சம்பவத்தில் இருந்து மெகபூபா முப்தி காயங்களின்றி தப்பினார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். இந்த விபத்து நடந்த சூழ்நிலைகள் குறித்து அரசு விசாரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த விபத்துக்கு காரணமான அவரது பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளாா்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்