மேஹாலயா தேனிலவு கொலை: புதிய திருப்பம்.. சஞ்சய் வர்மா என்பவருக்கு 100 முறைக்கு மேல் போன் செய்த சோனம் - பின்னணி என்ன?
மேஹாலயா தேனிலவு கொலை: ராஜாவை திருமணம் செய்வதற்கு முன்பு சோனம் தனது காதலனுக்கு 100க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளைச் செய்துள்ளார்

மேஹாலயா தேனிலவு கொலை: புதிய திருப்பம்.. சஞ்சய் வர்மா என்பவருக்கு 100 முறைக்கு மேல் போன் செய்த சோனம் - பின்னணி என்ன? (ANI)
-+++++++++++++மேகாலயா தேனிலவு கொலை வழக்கில் அடுத்த திருப்பமாக புதிய பெயர் வெளியாகியுள்ளது - சஞ்சய் வர்மா என்பவருக்கு சோனம் ரகுவன்ஷி, திருமணத்துக்கு முன்பு 100 முறைக்கு மேல் தொடர்பு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷியின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட மனைவி சோனம், ராஜாவைக் கொல்ல மூன்று கொலையாளிகளை நியமித்த தனது காதலன் ராஜ் குஷ்வாஹாவுடன் சதி செய்ததாகக் கூறப்படுகிறது.
மேஹாலயா மாநிலத்தில் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தின் சோஹ்ராவில் தேனிலவுக்குச் சென்றிருந்தபோது ராஜா ரகுவன்ஷி கடந்த மாதம் வெட்டி கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சோனம் உட்பட ஐந்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர்.