மீனவர்களின் படகுகளுக்கு தீ வைப்பு? - 40 படகுகள் எரிந்து நாசம்!
Visakhapatnam Harbour: விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 படகுகள் எரிந்து நாசமானது.
விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40 படகுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது.
ட்ரெண்டிங் செய்திகள்
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நள்ளிரவு ஒரு படகில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 35 ஃபைபர் இயந்திர படகுகளுக்கும் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், மீனவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த சம்பவத்தில் உயிர் சேதமோ காயமோ ஏதும் ஏற்படவில்லை.
மர்மநபர்கள் யாரேனும் படகுகளுக்கு தீ வைத்திருக்கலாம் என உள்ளூர் மீனவர்கள் சந்தேகிக்கின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்