Stephen Hawking: ’கடவுள்தான் உலகை படைத்தாரா?’ ஸ்டீபன் ஹாக்கிங் நினைவுதினம் இன்று!
“கடவுளின் இருப்பு பற்றிய அவரது கேள்விகள் பலரது கவனத்தை பெற்றது. கடவுள் கோட்பாடு குறித்த அவரது கருத்துக்கள் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியது”

புகழ்பெற்ற இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங் உடய பிரபஞ்சம் மற்றும் கடவுளின் இருப்பு அவரது கருத்துகள் கவனிக்க கூடிய ஒன்றாக இருந்தது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் 1942 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி பிறந்த ஹாக்கிங், பிரபஞ்சத்தின் மர்மங்களை நோக்கிய ஆய்வுகளில் தனது கவனத்தை செலுத்தினார்.
இவரது தந்தை மருத்துவர் தாயார் தத்துவவியல் பட்டதாரி. வடக்கு லண்டனை சேர்ந்த இவர்கள் 2ஆம் உலகப்போர் காரணமாக ஆக்ஸ் போர்டு நகரில் குடியேறினர். உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலையில் 1959ல் இடம் கிடைத்த உடன் தன் விருப்பத்தின் காரணமாக இயற்கை அறிவியலை தேர்வு செய்து படிக்க தொடங்கினார். இதில் பல ஆய்வுகளை மேற்கொண்டவர். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார்.
கருந்துளைகள் குறித்த ஆய்வு!
21 வயதில், ஹாக்கிங்கிற்கு அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் (ALS) என்ற நரம்பியக்கடத்தல் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் படிப்படியாக குணப்படுத்த முடியாத இந்த நோயினால் தன் கால், கை, பாதிக்கப்பட்டு இறுதியில் பேச்சையும் இழந்தார்.
உடலை சற்றும் தானாக அசைக்க முடியாத சூழலிலும் தொடர்ச்சியாக தன் மூளையை பட்டை தீட்டிக் கொண்டிருந்தார் ஹாக்கிங்ஸ். இதனால் தனது நகைச்சுவை ததும்பிய பேச்சால் அனைவரையும் கவர்ந்தார் என்பதே இந்த சக்கர நாற்காலி மனிதரின் தனிச்சிரிப்பு. பேச்சை இழந்த அந்த போராளி தொடர்ச்சியாக வாய்ஸ் சிந்தசைசர் கருவியின் உதவியால் இந்த உலகோடு கடைசி வரை உரையாடிய வண்ணம் வலம் வந்தார்.
அவரது கல்லூரி மற்றும் ஆய்வுபடிப்புகளுக்கு பிறகு, 1970களில் ஹாக்கிங்கின் மிக அற்புதமான கோட்பாடுகளில் ஒன்றான ’கருந்துளைகள்’ குறித்த ஆய்வை நடத்தினார்.
ஹாக்கிங் கதிர்வீச்சு!
வானத்தில் உள்ள பொருட்கள் முற்றிலும் "கருப்பு" அல்ல, அவை கதிர்வீச்சுகளை வெளியிடுகிறது என்ற கருத்தை ஹாக்கிங் முன் வைத்தார். இது "ஹாக்கிங் கதிர்வீச்சு" என்று அழைக்கப்பட்டது.
சர்ச்சையையும்! விவாதத்தையும் ஏற்படுத்திய கடவுள் கோட்பாடு!
அவரது விஞ்ஞான சாதனைகளுக்கு அப்பால், ஹாக்கிங் தத்துவங்களை நோக்கி சென்றார். குறிப்பாக கடவுளின் இருப்பு பற்றிய அவரது கேள்விகள் பலரது கவனத்தை பெற்றது. கடவுள் கோட்பாடு குறித்த அவரது கருத்துக்கள் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியது.
லியோனார்ட் ம்லோடினோவுடன் இணைந்து எழுதிய "தி கிராண்ட் டிசைன்" என்ற புத்தகத்தில், ஹாக்கிங், புவியீர்ப்பு மற்றும் குவாண்டம் இயக்கவியல் ஆகியவரை பிரபஞ்சம் தொடக்க காரணமாக அமைந்ததாக குறிப்பிடுகிறார். எனவே உலகை படைத்தவர் என்ற தத்துவத்தின் தேவையை இது இல்லாமல் செய்கிறது என்பது ஹாக்கிங்கின் முன் மொழிவாக இருந்தது.
ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட படைப்பாளியின் தேவை இல்லாமல், பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சிக்கு அறிவியல் விளக்கங்கள் காரணமாக இருக்கலாம் என்று ஹாக்கிங் நம்பினார்.
உடல் குறைப்பாடுகளை தாண்டி மனங்களை வென்றவர்!
ALS காரணமாக அவரது உடல் குறைபாடுகள் இருந்தபோதிலும், ஹாக்கிங்கின் குரல் உலகளவில் எதிரொலித்தது. அவரது உறுதியும், அறிவுத்திறனும், இயலாமையின் எல்லையைத் தாண்டி, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்தது.
மறைவு!
ஸ்டீபன் ஹாக்கிங் 2018 ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி காலமானார். கடவுள் கோட்பாடு உட்பட பிரபஞ்சத்தின் ஆழமான கேள்விகளைப் பற்றி சிந்திக்க அவரது அறிவியல் ஆய்வுகள் வழிகாட்டியாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்