மும்பையில் கனமழை.. விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்- இண்டிகோ அறிவிப்பு!
மும்பை, புனே, நவி மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் திங்கள்கிழமை காலை கனமழை பெய்தது.

மும்பை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக திட்டமிடப்பட்ட விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் திங்கள்கிழமை பயண ஆலோசனை ஒன்றை வெளியிட்டது. பயணத்தின் போது கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளுமாறும், விமான தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இண்டிகோ பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கனமழை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்.
"மும்பையில் தற்போது கனமழை பெய்து வருவதால், விமான அட்டவணையில் தற்காலிகமாக சில இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இன்று நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால், சாத்தியமான தாமதங்களை கருத்தில் கொண்டு, பயணத்திற்கு கூடுதல் நேரம் ஒதுக்குங்கள், குறிப்பாக போக்குவரத்து வழக்கத்தை விட மெதுவாக நகரலாம். நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம், விரைவில் உங்களை பத்திரமாக அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்", என்று இண்டிகோ தனது பயண ஆலோசனையில் தெரிவித்துள்ளது.