Manipur violence: பிஷ்ணுபூர் ஆயுதக் கிடங்கு கொள்ளை வழக்கு: 7 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!
மணிப்பூர் வன்முறை: மணிப்பூர் வன்முறையில் பிஷ்ணுபூர் ஆயுதக் கிடங்கு கொள்ளை வழக்கில் 7 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

மணிப்பூர் வன்முறை வழக்கில் பிஷ்ணுபூர் ஆயுதக் கிடங்கு கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேர் மீது சிபிஐ மார்ச் 3ஆம் தேதியான இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அஸ்ஸாமின் கவுகாத்தியில் உள்ள காம்ரூப் (மெட்ரோ) நீதிமன்றத்தில், சிபிஐ, இன்று தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
குற்றப்பத்திரிகையில் லைஷ்ராம் பிரேம் சிங், குமுக்சாம் தீரன் என்கிற தப்பா, மொய்ரங்தெம் ஆனந்த் சிங், அதோக்பம் காஜித் என்ற கிஷோர்ஜித், மைக்கேல் மங்கங்சா என்ற மைக்கேல், கோந்தௌஜம் ரோமோஜித் மெய்டி என்ற ரோமோஜித் மற்றும் கெய்ஷாம் ஜான்சன் என்கிற ஜான்சன் ஆகியோரின் பெயர்கள், அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.
இந்த வழக்கு ஆகஸ்ட் 2023ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இந்த ஏழு பேர் கொண்ட கும்பல், பிஷ்ணுபூரில் உள்ள நாரன்சீனாவில், 2ஆவது இந்திய ரிசர்வ் பட்டாலியன் தலைமையகத்தின் இரண்டு அறைகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மற்றும் 19,800 சுற்று வெடிமருந்துகளை கொள்ளையடித்தது.
இதில், சுமார் 9,000 தோட்டாக்கள், ஒரு ஏ.கே ரக துப்பாக்கி, மூன்று 'கட்டக்' துப்பாக்கிகள், 195 சுய துப்பாக்கிகள்,5 எம்.பி.துப்பாக்கிகள், 16.9 மி.மீ கைத்துப்பாக்கிகள், 25 குண்டுகள் துளைக்காத ஜாக்கெட்டுகள், 21 கார்பைன்கள் மற்றும் 124 கையெறி குண்டுகள் கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தன.
கடந்த ஆண்டு, மே 3ல் மணிப்பூரில் வெடித்த இன மோதலில் கொல்லப்பட்ட தங்கள் மக்களை ஒட்டுமொத்தமாக அடக்கம் செய்ய பழங்குடியினர் சூரசந்த்பூரை தேர்வுசெய்தனர். அப்போது அங்கு நோக்கி பேரணியாக செல்ல ஒரு கூட்டம் கூடியது.
மெய்தேயி சமூகத்தின் பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி) அந்தஸ்து கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மணிப்பூர் மாநிலத்தின் மலை மாவட்டங்களில் 'பழங்குடி ஒற்றுமை அணிவகுப்பு' ஏற்பாடு செய்யப்பட்டது. அது பின்னர் இன வன்முறையாக வெடித்ததில் 219 பேர் உயிரிழந்தனர். பல நூறு பேர் காயமடைந்தனர்.
மணிப்பூரின் மக்கள்தொகையில் சுமார் 53 சதவீதமாக உள்ள மெய்தேயி இன மக்கள், பெரும்பாலும் இம்பால் பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர். நாகாக்கள் மற்றும் குக்கிகள், பழங்குடிகளாக உள்ளனர். இவர்கள், மாநிலத்தில் 40 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்