Worm in Chocolate: சாக்லேட்டில் புழு-அதிர்ச்சி அடைந்த நபர் என்ன செய்தார் என்பதை பாருங்க
கேட்பரி சாக்லேட் (Roasted Almond) அதில் வெள்ளை புழுக்கள் மற்றும் வலை இருப்பதைக் கண்டதால் 'உட்கொள்வது பாதுகாப்பற்றது' என்பதை ஆய்வக அறிக்கை உறுதிப்படுத்தியதாக ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

கேட்பரி சாக்லேட்டில் ஒரு புழு ஊர்ந்து செல்வதைக் காட்டும் வீடியோவை ஒருவர் பகிர்ந்தபோது சமூக ஊடகங்களில் புயலைக் கிளப்பினார். கேட்பரி சாக்லேட்டில் (வறுத்த பாதாம்) வெள்ளை புழுக்கள் மற்றும் வலைகள் காணப்பட்டதால் அதை உட்கொள்வது பாதுகாப்பற்றது என்பதை தெலுங்கானா மாநில உணவு ஆய்வகம் உறுதிப்படுத்தியதாக அவர் இப்போது ஒரு அப்டேட்டைப் பகிர்ந்துள்ளார்.
ராபின் சக்கேயஸ் ஆய்வகத்திலிருந்து தனக்கு கிடைத்த அறிக்கை பற்றிய கூடுதல் விவரங்களையும் பகிர்ந்து கொண்டார். "ரத்னதீப் ரீடெய்ல் நிறுவனத்தில் வாங்கிய 2 கேட்பரி சாக்லேட்டுகளின் அறிக்கை இதோ. நம் குழந்தைகள் அடிக்கடி உட்கொள்ளும் பாதுகாப்பற்ற உணவை வழங்கியதற்காக எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்கள் பொறுப்பேற்கவும் தண்டிக்கவும் வேண்டிய நேரம் இது!" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேட்பரி டெய்ரி மில்க் மற்றும் ரத்னதீப் ரீடெய்ல் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் கேட்பரியின் தாய் நிறுவனமான மாண்டலெஸ் இன்டர்நேஷனலையும் ஜாக்கியஸ் டேக் செய்து, "பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த முழுமையான அலட்சியத்திற்கு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.