Wife Bites : பிறப்புறுப்பை கடித்து வைத்த மனைவி.. அந்த இடத்தில் மூன்று அறுவை சிகிச்சை.. மனைவி மீது புகார் அளித்த கணவர்!
மத்திய பிரதேசத்தில் மனைவி மீது கணவர் கொடுத்த புகாரை கேட்டு ஆடிப்போன போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவை சேர்ந்த ரகுராஜ் குஷ்வாஹா, தன் மனைவியால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரி போலீஸ் அதிகாரிகளை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். இந்த புகாரை பெற்ற போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவருக்கு உறுதி அளித்திருக்கிறார். அந்த நபர் கொடுத்த புகார் கடிதம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர் கொடுத்த புகார் தான் பேசுபொருளாகி உள்ளது.
அந்த புகாரில், ”எனக்கும் லட்சுமி என்ற ராஜகுமாரிக்கும் சில வருடங்ளுக்கு முன்பு திருமணம் நடந்தது. என்னுடன் கல்யாணம் ஆனதில் இருந்தே என் மனைவியின் நடத்தை சரியில்லை. தினமும் வீட்டிற்கு பலபேர் தெரியாதவர்கள் வந்து செல்வார்கள். அவர்களை அழைத்து வந்து பேசிக்கொண்டிருப்பார்.
முதலில் அவருடைய உறவினர்களாக இருக்கலாம் என்று நான் நினைத்தேன். தினமும் வீட்டுக்குள் தெரியாதவர்கள் வந்து செல்லவது வழக்கமானதால் எனக்கே என் மனைவி மீது சந்தேகம் வந்தது. தெரியாதவர்கள் இப்படி வீட்டுக்குள் வருவதும் போவதும் சரியல்லை என்று என் மனைவியை கண்டித்தேன்.
ஆனால் என் மனைவி லட்சுமி எதையுமே கேட்கவில்லை. நான் சொல்வதை ஒரு பொருட்டாய் மதிப்பதில்லை. ஆனால் அவர் பதிலுக்கு பலிவாங்கிவிட்டார். என்னையும் என் குடும்பத்தினரையும் பொய் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி துன்புறுத்த ஆரம்பித்தார்.
ஒருமுறை எனது 75 வயது தந்தை கல்யாண் சிங் மீது எனது மனைவி மானபங்கம் செய்தாக பொய்யான வழக்கை போட்டுவிட்டார். இப்படி தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், நான் ஒருநாள் மனைவியை கடுமையாக திட்டிவிட்டேன். அப்போது அவள் கோபமடைந்து என்னுடைய பிறப்புறுப்பினை கடித்து விட்டார். கதறியபடி வந்த என்னை உறவினர்கள் சிகிச்சைக்காக மொரீனா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் அங்கிருந்து குவாலியருக்கு அனுப்பப்பட்டேன் குவாலியரில், மருத்துவர்கள் எனது பிறப்புறுப்பில் மூன்று அறுவை சிகிச்சை செய்தனர். எனது மனைவி ராஜ்குமாரி மீது வழக்குப் பதிவு செய்து எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறேன்" என அந்த புகார் மனுவை கொடுத்துள்ளார். இந்த புகார் மீது தான் மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9