Crime : முந்திரி தோப்பில் தகராறு.. கோடாரியால் மனைவி தலையை துண்டித்த கணவர்.. தலையோடு ஊர்வலமாக சுற்றியதால் அலறிய மக்கள்!
ஒடிசாவின் கஜபதியில் மனைவி மீது உள்ள சந்தேகத்தால் கோடாரியால் மனைவியை கணவர் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள சௌத்ரி திகர்பாடாவைச் சேர்ந்தவர் ஊர்மிளா சாஹு (30). இவரது கணவர் சந்திர சேகர் கர்ஜீ (38). இவர்களுக்கு இரண்டு வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் சந்திர சேகருக்கு மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மனைவிக்கும் பக்கத்து வீட்டு நபருக்கும் தகாத உறவு இருப்பதாக சந்தேகப்பட்டுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல கணவன் மனைவி இருவரும் முந்திரி தோப்புக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சந்திர சேகர் கையில் இருந்த கோடாரியால் மனைவியின் தலையை துண்டித்துள்ளார். பின்னர் தலையை மட்டும் கையில் எடுத்து கொண்டு தெருவில் சென்றுள்ளார்.
தலையுடன் சந்திர சேகர் தெருவில் நடந்து சென்றபோது அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பதறிபோய் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சந்திர சேகரை கைது செய்து அவரிடம் இருந்த தலையை மீட்டனர். பின்னர் முந்திரி தோப்பில் இருந்த ஊர்மிளாவின் உடலை மீட்டனர். உடல் பிரேத பரிசோதனைக்காக பரலகாமண்டியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
பின்னர் போலீசார் கொலைக்கான சரியான காரணத்தை கண்டறிய ஊர்மிளாவின் குடும்பத்தினரை விசாரித்து வருகின்றனர். சந்திர சேகர் முதல் மனைவி தன்னை சித்திரவதை செய்ததாகக் கூறி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவரை விட்டு விலகியுள்ளார். பின்னர் ஊர்மிளாவை திருமணம் செய்துள்ளார்.
சந்திர சேகரிடம் இருந்து பயன்படுத்தப்பட்ட கோடாரியை போலீசார் கைப்பற்றியதாகவும்,தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காஷிநகர் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் சுஷாந்த் சாஹு தெரிவித்தார். மனைவி மீது உள்ள சந்தேகத்தால் கோடாரியால் மனைவியை கணவர் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9