POCSO Case: ‘இது பலாத்காரம் அல்ல, ஒருமித்த உறவு’ சிறுமி வழக்கில் இளைஞர் விடுதலை!
‘இது ஒருமித்த உறவின் வழக்காகத் தெரிகிறது. இது மருத்துவ அதிகாரி வழங்கிய தகவலின் அடிப்படையில் தெளிவாகத் தெரிகிறது’
மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மகாராஷ்டிராவின் நவி மும்பையைச் சேர்ந்த 24 வயது இளைஞனை சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
அதை ஒருமித்த உறவு வழக்கு என்று குறிப்பட்டு, சிறப்பு நீதிபதி (போக்சோ) வி.வி.விர்கார் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டில், துல்ஜாபூருக்கு தனது அண்டை வீட்டு சிறுமியுடன் ஓடிப் போன அந்த இளைஞன், அவளைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அது தொடர்பாக 2014 ஆம் ஆண்டில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், போலீசார் இருவரையும் தேடி பிடித்தனர்.
இந்த வழக்கு விசரணை நடந்து வந்த நிலையில் நீதிபதி தனது உத்தரவில், ‘இது ஒருமித்த உறவின் வழக்காகத் தெரிகிறது. இது மருத்துவ அதிகாரி வழங்கிய தகவலின் அடிப்படையில் தெளிவாகத் தெரிகிறது.
சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்பது நிரூபிக்கப்படாததால், அந்த நபர் மீது கடத்தல் குற்றச்சாட்டை சுமத்த முடியாது,’’ என்று நீதிபதி தெரிவித்தார். "இது ஒருமித்த உறவாக இருக்கும்போது, சம்பவத்தின் போது சிறுமிக்கு 17 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் என்று வயதை குறிப்பிட்டாலும், இது புரிந்துகொள்ளும் மற்றும் விவேகமுள்ள வயது என்பதால், இளைஞரோடு உடலுறவு வைத்த செயலை கற்பழிப்பு என்று கூற முடியாது," என்றும் கூறி, நீதிபதி அந்த இளைஞரை விடுதலை செய்தார்.