ஹிட்லர் ஆட்சியைவிடக் கொடுமையானது பாஜக ஆட்சி - மம்தா கடும் தாக்கு
பா.ஜ.க தலைமையிலான ஆட்சியை ஹிட்லர், முசோலினி, ஜோசப் ஸ்டாலின் ஆகியோரின் ஆட்சியுடன் ஒப்பிட்டு கடுமையாகச் சாடியிருக்கிறார் மம்தா பானர்ஜி.
கொல்கத்தா: ஹிட்லர், முசோலினி, ஜோசப் ஸ்டாலின் ஆகியோரது ஆட்சியை காட்டிலும் மிக மோசமான பா.ஜ.க ஆட்சி என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.
மத்தியில் ஆளும் பா.ஜ.க தலைமையிலான அரசை மிகக்கடுமையாக தொடர்ந்து எதிர்த்து வருபவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. பா.ஜ.க அரசு மக்கள் விரோத கொள்கைகளை கடைபிடித்து வருவதாக தொடர்ந்து விமர்சித்து வரும் மம்தா பானர்ஜி, பா.ஜ.க தலைமையிலான ஆட்சியை ஹிட்லர், முசோலினி, ஜோசப் ஸ்டாலின் ஆகியோரின் ஆட்சியுடன் ஒப்பிட்டு கடுமையாகச் சாடியிருக்கிறார்.
கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மம்தா கூறுகையில், "பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு, மாநில விவகாரங்களில் தலையிட்டு வருகிறது. இதற்காக மத்திய நிறுவனங்களை பயன்படுத்துகிறது. பா.ஜ.க தலைமையிலான ஆட்சியானது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை புல்டோசரை கொண்டு இடிப்பது போல் தகர்த்து வருகிறது. விசாரணை அமைப்புகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கொடுக்க வேண்டும். எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி மத்திய அமைப்புகளை பாரபட்சமின்றி செயல்பட அனுமதிக்க வேண்டும். பா.ஜ.க-வின் ஆட்சியானது ஹிட்லர், முசோலினி, ஜோசப் ஸ்டாலின் போன்றவர்களின் ஆட்சியைக் காட்டிலும் மிக மோசமானது." என்றார்.
டாபிக்ஸ்