Mamata Banerjee: மொத்தம் நான்கு தையல்கள்..! வீடு திரும்பிய மம்தா - தொடர் மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை
நெற்றியில் காயமடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

தலையில் தையல்களுடன் வீடு திரும்பிய மம்தா பானர்ஜி (Saikat Paul)
கொல்கத்தாவில் உள்ள காளிகாட் வீட்டில் கீழே விழுந்ததில் மம்தாவுக்கு காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர், கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
நெற்றியில் ரத்தம் வழிந்த நிலையில் காயங்களுடன் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு நெற்றி மற்றும் மூக்கு பகுதியில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு இருந்தது.
இதையடுத்து நெற்றியில் மூன்று தையல் மற்றும் மூக்கில் ஒரு தையல் போடப்பட்டது. அவருக்கு நரம்பியல், இருதயவியல் மற்றும் பொது மருத்துவ துறையின் தலைமை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஈசிஜி மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.