Maldives politician: பிரதமர் மோடியை கிண்டல் செய்த மாலத்தீவு அரசியல்வாதி அமைச்சர் ஜெய்சங்கருக்கு பிறந்த நாள் வாழ்த்து
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு பதிவுக்கு மாலத்தீவு அரசியல்வாதி ரமீஸ் பதிலளித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணத்திற்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக அவதூறாகப் பேசிய மாலத்தீவு அரசியல்வாதி ஜாஹித் ரமீஸ், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு செவ்வாய்க்கிழமை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
"மதிப்பிற்குரிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். வெற்றி மற்றும் நேர்மறையான இராஜதந்திர முயற்சிகள் நிறைந்த ஒரு ஆண்டு நிறைந்ததாக இருக்க வேண்டும் என உங்களை வாழ்த்துகிறேன்" என்று ஜாஹிட் ரமீஸ் எக்ஸ் இல் (முன்னர் ட்விட்டர்) எழுதினார்.
தனது பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு ஜெய்சங்கர் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
அதில், "மத்திய அமைச்சர் திரு ஜெய்சங்கர் ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் வெளியுறவு கொள்கையை வடிவமைப்பதில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகள் முன்னுதாரணமானவை. அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர் தொடர்ந்து நாட்டுக்கு சேவையாற்றி வருவதால் இந்த ஆண்டு மேலும் வெற்றியையும், நல்ல ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், “உங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி. நமது நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக நாங்கள் பணியாற்றும்போது உங்கள் பார்வை ஒரு நிலையான உத்வேகமாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மாலத்தீவின் அரசியல்வாதி ரமீஸ் மற்றும் துணை அமைச்சர் மரியம் ஷியூனா உள்ளிட்ட மாலத்தீவு அரசியல்வாதிகள், மோடியின் சமீபத்திய லட்சத்தீவு சென்று எக்ஸ் தளத்தில் போஸ்ட் போட்டதைத் தொடர்ந்து எதிர்வினையாற்றினர்.
இந்தியாவுக்கும் அதன் தலைமைக்கும் எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்ட குறைந்தது மூன்று அமைச்சர்களை மாலத்தீவு அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை இடைநீக்கம் செய்துள்ளது, அதே நேரத்தில் சர்வதேச கூட்டாளிகளுடனான உறவுகளை பாதிக்கும் எதையும் செய்ய வேண்டாம் என்று அதிகாரிகளை அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.
மாலத்தீவில் சுற்றுலாப் பயணிகளுக்கான சிறந்த சேவைகள் குறித்து பெருமையடித்துக் கொண்ட ரமீஸ், லட்சத்தீவை மேம்படுத்துவதற்கான மோடியின் முயற்சியை கிண்டல் செய்தார். மாலத்தீவின் சுற்றுலாத்துறையுடன் போட்டியிடும் யோசனையை அவர் வலியுறுத்தினார். லட்சத்தீவின் தூய்மை குறித்து கேள்வி எழுப்பிய ரமீஸ், ஹோட்டல் அறைகளின் தரத்தை கேலி செய்தார்.
ரமீஸ் எக்ஸ் தளத்தில், "இந்த நடவடிக்கை சிறந்தது. ஆனால், எங்களுடன் போட்டியிடும் எண்ணம் ஏமாற்று வேலை. நாங்கள் வழங்கும் சேவையை அவர்கள் எவ்வாறு வழங்க முடியும்? அவர்கள் எப்படி இவ்வளவு சுத்தமாக இருக்க முடியும்? அறைகளில் நிரந்தர துர்நாற்றம் வீசுவது மிகப்பெரிய வீழ்ச்சியாக இருக்கும்" என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, பல தேசப்பற்று கொண்டவர்கள் மாலத்தீவு செல்லும் பயண திட்டத்தை கைவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்