Mahindra XEV 9e, BE 6e மின்சார எஸ்.யூ.வி கார்கள்.. வரும் நவம்பர் 26ஆம் தேதி அறிமுகம்
மஹிந்திராவின் அடுத்த தலைமுறை மின்சார எஸ்யூவிகள் நாட்டின் மின்சார வாகன சந்தையில் வரவுள்ளன. அதன்படி, Mahindra XEV 9e, BE 6e மின்சார எஸ்.யூ.வி கார்கள்.. வரும் நவம்பர் 26ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ளன.
ஒரு காலத்தில் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, புதுப்பிக்கத் தக்க ஆற்றலின் பயன்பாட்டை ஊக்குவிக்க ஒவ்வொரு அரசும் முயற்சிகள் மேற்கொண்டன. அதன் தொடர்ச்சியாகவே, சோலார் பேனலில் எரியும் விளக்குகள், காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்பது, கழிவுகளில் இருந்து உருவாகும் பயோகேஸ் ஆகியவை மக்களின் பயன்பாட்டுக்கு வந்தன. அப்படி தான் சமீப காலமாக, பேட்டரியில் இயங்கும் வாகனங்களும், மின்சார சார்ஜிங்கில் இயங்கும் வாகனங்களும் வரத் தொடங்கின.
அப்படி, மஹிந்திரா வாகன உற்பத்தி நிறுவனம் வரும் நவம்பர் 26ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஒரு நிகழ்வில் நாட்டில் XEV மற்றும் BE ஆகிய இரண்டு மாடல்களில் மின்சார கார்களை அறிமுகப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறது.
இரண்டு மின்சார எஸ்.யூ.வி கார் மாடல்கள்:
மஹிந்திரா XEV 9e மற்றும் BE 6e வடிவத்தில் XEV மற்றும் BE பிராண்டின்கீழ் தலா ஒன்று என இரண்டு மின்சார SUV மாடல்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
Mahindra XUV400 இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனச் சந்தை நிறுவனத்தின் முதல் முயற்சியாக இருந்தாலும், மஹிந்திரா நிறுவனம் மிகவும் தீவிரமாக நுழைவது இதுவே முதல் முறையாகும். மேலும் XEV மற்றும் BE பிராண்டுகளின்கீழ் உள்ள மாடல்கள் மின்சார தோற்றம் கொண்ட INGLO கட்டமைப்பாக இருக்கும்.
Mahindra XEV 9e மற்றும் BE 6e பற்றிய விரிவான விவரங்கள் இன்னும் அறியப்படவில்லை, ஏனெனில் Mahindra விவரங்களை மறைத்து வைத்துள்ளது. ஆனால் இந்த வாகனங்கள் சோதனை ஓட்டத்தில் பல முறை உருமறைப்பின் கீழ் காணப்பட்டுள்ளன.
இப்போதைக்கு, Mahindra அதன் XEV 9eவில் ஒரு ஆடம்பரமான ஓட்டுநர் அனுபவத்தை வழங்கும் என்று கூறுகிறது. இது வெளியில் இருந்து அதிநவீன தோற்றம் கொண்டு இருக்கிறது. மேலும், உள்ளே அம்சமான கேபினுடன் உள்ளது. மஹிந்திரா BE 6e ஐ பொறுத்தவரை, இது முதன்மையாக ஸ்போர்ட்டி டிரைவ் செய்ய விரும்புபவர்களின் விருப்பமாக நிலைநிறுத்தப்படும் என்று நிறுவனம் கூறுகிறது.
இந்தியாவின் எலக்ட்ரிக் வாகனச் சந்தை:
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்திச் சந்தை என்பது முதன்மையாக இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களால் இருக்கிறது. எலட்ரிக் வாகன உற்பத்திச் சந்தையின் வாடிக்கையாளர்களைப் பெற களமிறங்கிய புதிய வாகன நிறுவனங்களுக்குச் சவால் விட, பல புதிய மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் உருவாகியுள்ளன.
இதற்கு மாறாக, மின்சார வாகனங்களை வாங்கும் நுகர்வோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. 2023/24ஆம் நிதியாண்டில் சுமார் 91,000 மின்சார வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. இதில் Tata Motors சந்தையில் சிங்கம் போன்று திகழ்கிறது.
இந்நிறுவனத்தில், Tiago EV மாடல், Curvv EV மாடல் என டாடா நிறுவனத்தால் பல மின்சார கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் JSW MG Motor India நிறுவனமானது, Comet EV, Windsor EV மற்றும் ZS EV போன்ற எலெக்ட்ரிக் வாகன மாடல்களை வழங்குகிறது.
Hyundai மற்றும் Kia தற்போது முறையே Ioniq 5 மற்றும் EV6 ஐ ஆகிய எலக்ட்ரிக் கார்களை வழங்குகின்றன. இரண்டு மாடல்களின் விலை ரூ.45 லட்சம் (வரிக்கு முன்பு), Kia சமீபத்தில் தனது EV9 வரை அப்டேட் வெர்ஷன் ஆனது. இதன் விலை ரூ.1.20 கோடிக்கு மேல் ஆகும்.
ஆனால், இந்தியாவில் மின்சார கார் சந்தையில், கையில் ஒரு பெரிய விற்பனைத் தளத்தைக் கொண்டுள்ளது. குறிப்பாக, Hyundai விரைவில் Creta EV என்னும் எலக்ட்ரிக் கார் வாகனத்தை உற்பத்தி செய்வதாக உறுதியளித்துள்ளது மற்றும் Maruti Suzuki அதன் eVX-ஐ 2025 வசந்த கால வெளியீட்டிற்கு தயார் செய்கிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்