மஹிந்திரா Bolero Neo
Mahindra Bolero Neo: இது என்ன காரா? இல்ல கப்பலா?
மஹிந்திரா நிறுவனம் Bolero Neo காரில் புதிய லிமிடெட் எடிஷன் மாடலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இருக்கும் முன்னணி கார் நிறுவனங்களில் மஹிந்திரா நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் வெளியிட்டு வரும் கார்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்தியாவில் தற்போது எஸ்யூவி கார்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
தற்போது இந்நிறுவனத்தின் Bolero Neo காரில் புதிய லிமிடெட் எடிஷன் ஒன்று மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த கார் எத்தனை யூனிட்டுகள் உற்பத்தி செய்யப்படும் என்பது குறித்து தெரியவில்லை.
இந்த கார் எக்ஸ் ஷோரூம் விலையானது 11.50 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது.
இதன் அம்சங்கள்
- இதில் 1.5 லிட்டர் mHawk 100 டீசல் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இது 100BHP பவர் மற்றும் 260 NM டார்க்விசை கொண்டதாகும்.
- இந்த காரில் LED DRLS, ஹெட் லைட், போக் லைட், டூயல் டோன் லெதர் அபோல்ஸ்ட்ரி, ரியர் பார்க்கிங் கேமரா, ரூப் ரைல் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 5 ஸ்பீட் கியர் பாக்ஸ் வசதி உள்ளன.
- இதில் டூயல் tone லெதர் அபோல்ஸ்ட்ரி, ஸ்டேரிங் மவுண்ட் கண்ட்ரோல், மஹிந்திரா ப்ளூ சென்ஸ் வசதி, 4 ஸ்பீக்கர், எலக்ட்ரானிக் ORVMs , 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் ஸ்க்ரீன், கிருஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
- இதில் பாதுகாப்புக்காக ABS, EBD, ரிவர்ஸ் பார்க்கிங் வசதி, ஸ்பீட் அலெர்ட், டூயல் ஏர் பேக் வசதி, சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.