Election Results Live 2024: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்..!
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மற்றும் ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேரலை
Sat, 23 Nov 202403:52 PM IST
தொண்டர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி!
மகாராஷ்டிரா தேர்தலில் வெற்றியை தொடர்ந்து பாஜக தலைமைய அலுவலகத்தில் பிரதமர் மோடி தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இன்று பல மாநிலங்களின் இடைத்தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பாஜகவுக்கு பலத்த ஆதரவு அளித்துள்ளன. அஸ்ஸாம் மக்கள் மீண்டும் பாஜக மீது நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நாடு இப்போது வளர்ச்சியை மட்டுமே விரும்புகிறது என்றார்.
Sat, 23 Nov 202402:29 PM IST
பாஜக உற்சாக கொண்டாட்டம்!
மகாராஷ்டிரா தேர்தல் வெற்றியை பாஜக அலுவலகத்தில் உற்சாகமாக கொண்டாடிய துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ்.
Sat, 23 Nov 202402:09 PM IST
இன்ஸ்டாவில் 5.6 மில்லியன்... வாங்கிய ஓட்டுகளோ 155!
மகாராஷ்டிரா - வெர்சோவா தொகுதியில் ஆசாத் சமாஜ் (கன்சிராம்) கட்சி சார்பில் போட்டியிட்ட இந்தி பிக் பாஸ் புகழ் அஜாஸ் கான் வெறும் 155 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி. இன்ஸ்டாகிராமில் சுமார் 5.6 மில்லியன் (56 லட்சம்) ஃபாலோயர்களை கொண்ட இவர் நோட்டாவை (700) விட குறைந்த வாக்குகளை பெற்றுள்ளார்.
Sat, 23 Nov 202401:50 PM IST
பாஜக வேட்பாளர் கேப்டன் தமிழ்ச்செல்வன் வெற்றி!
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் சயான் கோலிவாடா தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கேப்டன் தமிழ்ச்செல்வன் வெற்றி. காங்கிரஸ் வேட்பாளர் கணேஷ்குமார் யாதவை விட 7,895 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
Sat, 23 Nov 202401:04 PM IST
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது?
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளில் மாலை 5 மணி நிலவரப்படி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 57 இடங்களிலும், பாஜக கூட்டணி 23 இடங்களிலும் முன்னிலை வகித்துவருகின்றன. தற்போது உள்ள முன்னிலை நிலவரப்படி ஜார்க்கண்ட் மாநிலத்தில் மீண்டும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது என்பது தெரிகிறது.
Sat, 23 Nov 202412:50 PM IST
மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்த பிரியங்கா!
வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து வாழ்த்து பெற்றார் பிரியங்கா காந்தி.
Sat, 23 Nov 202412:30 PM IST
நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் பாஜகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி
Sat, 23 Nov 202412:18 PM IST
வயநாடு எம்.பி. ஆனார் பிரியங்கா காந்தி
வயநாடு தொகுதி மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி 4 லட்சத்து 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
Sat, 23 Nov 202412:05 PM IST
ஃபட்னாவிஸ் உடன் பேசிய அமித் ஷா!
உள்துறை அமைச்சர் அமித் ஷா தேவேந்திர ஃபட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாருடன் பேசியுள்ளார். மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிமுகத்தில் இருக்கும் நிலையில் பேசியுள்ளார். அடுத்த முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் மூவருடனும் பேசியுள்ளார்.
Sat, 23 Nov 202411:55 AM IST
தாராவி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி!
மகாராஷ்டிராவில் உள்ள தாராவி தொகுதியில் காங்கிரஸ் கட்சி 70,727 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஷிண்டே சிவசேனா வேட்பாளரை விட 23,459 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வென்றுள்ளது.
Sat, 23 Nov 202411:39 AM IST
பிரம்மாண்ட வெற்றி!
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.
Sat, 23 Nov 202411:22 AM IST
ஜார்க்கண்ட் நிலவரம்!
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக 33.10% வாக்குகளையும், முக்தி மோர்ச்சா 23.15% வாக்குகளையும் பெற்றுள்ளது.
Sat, 23 Nov 202411:18 AM IST
மகாராஷ்டிரா முதல்வர் யார்?
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ், "யார் முதல்வர் என்பதில் எந்தவொரு குழப்பமும் இருக்காது. தேர்தலுக்குப் பிறகு, மூன்று கட்சிகளின் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து முடிவு செய்யப்படும். நாளைய தினமே கூட இந்த முடிவு எடுக்கப்படலாம். இந்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்வோம். இதில் எந்தவொரு சர்ச்சையும் இருக்காது எனக் கூறினார்.
Sat, 23 Nov 202410:48 AM IST
மக்கள் வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்- கல்பனா சோரன்
ஜார்க்கண்டில் ஜேஎம்எம் ஆட்சியைத் தக்கவைக்கும் நிலையில், அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவியும் காண்டே தொகுதி ஜேஎம்எம் வேட்பாளருமான கல்பனா சோரன் கூறுகையில், மக்கள் வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். மக்கள் ஹேமந்த் சோரனை ஆசீர்வதித்துள்ளனர். பொதுமக்களுக்கான அரசு மீண்டும் இங்கே அமையப் போகிறது எனக் கூறினார்.
Sat, 23 Nov 202410:42 AM IST
வயநாட்டில் வெல்லும் பிரியங்கா காந்தி
வயநாடு லோக்சபா தேர்தலில் பிரியங்கா காந்தி மிக பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். மொத்த பதிவான வாக்குகளில் சுமார் 64.99% வாக்குகள் பிரியங்காவுக்கு பதிவாகியுள்ளது.
Sat, 23 Nov 202410:30 AM IST
மகாராஷ்டிரா தேர்தல்!
தேவேந்திர ஃபட்னாவிஸ் கருத்து மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் குறித்து அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறுகையில், மகாராஷ்டிர மக்கள் எங்களுக்கு வரலாறு காணாத வெற்றியை அளித்துள்ளனர். மக்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருப்பதையே இது காட்டுகிறது. அனைத்து தரப்பு மக்களும் எங்களுக்கு வாக்களித்துள்ளனர் இது மகாயுதி கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோரின் வெற்றி. இது ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என்றார்.
Sat, 23 Nov 202410:06 AM IST
உ.பி இடைத்தேர்தலில் பாஜக முன்னிலை!
உத்தரபிரதேசத்தில் 9 தொகுதிகளில் 6-ல் பாஜக முன்னிலை. சமாஜ்வாடி -2, ஆர்எல்டி 1 முன்னிலை நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்த பாஜக பேரவை இடைத்தேர்தலில் முன்னிலை.
Sat, 23 Nov 202409:52 AM IST
வயநாடு எம்.பி ஆகிறார் பிரியங்கா காந்தி!
பிரியங்கா காந்தி 3.04 லட்சம் வாக்குகள் முன்னிலையில் உள்ள நிலையில் 2.39 லட்சம் வாக்குகளே எண்ணப்பட மொத்தம் 9.52 லட்சம் வாக்குகள் பதிவான நிலையில் தற்போது வரை பிரியங்கா 4.61 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார்.
Sat, 23 Nov 202409:39 AM IST
பிரியங்கா காந்தி முன்னிலை!
எண்ணப்பட வேண்டிய வாக்குகளை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை. கேரளாவின் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியின் வெற்றி உறுதியானது.
Sat, 23 Nov 202409:18 AM IST
மகாராஷ்ட்ராவில் முதலமைச்சரை தேர்வு செய்ய பாஜக தீவிரம்!
மகாராஷ்ட்ராவில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதால் முதலமைச்சர் பதவியை கைப்பற்ற கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
Sat, 23 Nov 202409:00 AM IST
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்?
கூட்டணிக் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் பேசி அடுத்த முதலமைச்சரை முடிவு செய்வார்கள் என தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
Sat, 23 Nov 202408:48 AM IST
பிரியங்கா காந்தி வெற்றி!
வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியின் வெற்றி உறுதியானது. 3,09,690 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Sat, 23 Nov 202408:42 AM IST
பிரியங்கா காந்தி முன்னிலை
வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி முன்னிலை. 3,09,690 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Sat, 23 Nov 202408:17 AM IST
மகாராஷ்டிரா முன்னிலை நிலவரம்
மகாராஷ்டிராவில் என்டிஏ கூட்டணி 217, இந்தியா கூட்டணி 64, மற்றவை 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
Sat, 23 Nov 202407:41 AM IST
மேற்கு வங்க இடைத்தேர்தல் : 3 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி
மேற்கு வங்க இடைத்தேர்தல் நடந்த 6 தொகுதிகளில் 3 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
Sat, 23 Nov 202407:23 AM IST
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பது இதுவரை முடிவாகவில்லை; கூட்டணி கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் பேசி அடுத்த முதலமைச்சரை முடிவு செய்வார்கள் என அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Sat, 23 Nov 202407:21 AM IST
மகாராஷ்டிரா முன்னிலை நிலவரம்
மகாராஷ்டிராவில் என்டிஏ கூட்டணி 215, இந்தியா கூட்டணி 65, மற்றவை 8 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
Sat, 23 Nov 202407:20 AM IST
கர்நாடகா இடைத்தேர்தல் நிலவரம்
கர்நாடகாவில் 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்த நிலையில் சந்தூர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. சிகான், சன்னப்பட்னா தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகிக்கிறது.
Sat, 23 Nov 202406:48 AM IST
வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி வெற்றி உறுதியானது!
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டார். தற்போது பெற்று 3,04,920 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். எண்ணப்பட வேண்டிய வாக்குகளை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை வகிக்கிறார்.
Sat, 23 Nov 202406:30 AM IST
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை
மேற்கு வங்கத்தில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்த நிலையில் தொடர்ந்து அனைத்து தொகுதிகளிலும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.
Sat, 23 Nov 202406:25 AM IST
மகாராஷ்டிரா முன்னிலை நிலவரம்
மகாராஷ்டிராவில் என்டிஏ கூட்டணி 216, இந்தியா கூட்டணி 62, மற்றவை 10 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
Sat, 23 Nov 202406:15 AM IST
பிரியங்கா காந்தி முன்னிலை
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டார். இந்நிலையில் தற்போது 3,37,064 வாக்குகள் பெற்று 2,21,374 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
Sat, 23 Nov 202406:13 AM IST
ராஜஸ்தானில் பாஜக முன்னிலை
ராஜஸ்தானில் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 5 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்தது. 2 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
Sat, 23 Nov 202406:10 AM IST
சரத்பவாரை பின்னுக்கு தள்ளிய அஜித் பவார்
மகாராஷ்டிராவில் சரத் பவாருக்கு செல்வாக்குள்ள பகுதியில் அஜித் பவார் முன்னிலை வகிக்கிறார். தேசிய வாத காங்கிரஸ் என்ற பெயரில் சரத் பவார் போட்டியிட்டார்.
Sat, 23 Nov 202406:06 AM IST
பீகார் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்
பீகாரில் 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் பாஜக 2 இடங்களிலும், ஹந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ஐக்கிய ஜனதா தள் கட்சிகள் தலா ஒரு தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
Sat, 23 Nov 202406:02 AM IST
ஜார்கண்ட் தேர்தல்: இந்தியா முன்னிலை நிலவரம்
ஜார்கண்டில் இந்தியா கூட்டணி 48 இடங்களிலும், என்டிஏ 31 இடங்களிலும், மற்றவை 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
Sat, 23 Nov 202406:01 AM IST
மகாராஷ்டிரா முன்னிலை நிலவரம்
மகாராஷ்டிராவில் என்டிஏ கூட்டணி 209, இந்தியா கூட்டணி 69, மற்றவை 10 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
Sat, 23 Nov 202405:58 AM IST
வயநாடு இடைத்தேர்தல் முன்னிலை நிலரவம்
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டார். இந்நிலையில் தற்போது 2,39,554 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
Sat, 23 Nov 202405:21 AM IST
பிரசாந்த் கிஷேர் பின்னடைவு
பிகாரில் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. பிகாரில் முதல் முறையான தேர்தல் களம் கண்ட பிரஷாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. பிற கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்து தந்த பிரஷாந்த் கிஷேர் பின்னடைவை சந்தித்துள்ளார்.
Sat, 23 Nov 202405:18 AM IST
வயநாடு இடைத்தேர்தல் முன்னிலை நிலரவம்
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டார். இந்நிலையில் தற்போது 2, 13,726 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
Sat, 23 Nov 202405:17 AM IST
ஜார்கண்ட் தேர்தல் முன்னிலை நிலவரம்
ஜார்கண்டில் இந்தியா கூட்டணி 49 இடங்களிலும், என்டிஏ 30 இடங்களிலும், மற்றவை 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
Sat, 23 Nov 202405:07 AM IST
மகாராஷ்டிரா முன்னிலை நிலவரம்
மகாராஷ்டிராவில் என்டிஏ கூட்டணி 195, இந்தியா கூட்டணி 86 மற்றவை 7 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
Sat, 23 Nov 202405:02 AM IST
ஜார்கண்ட் தேர்தல் முன்னிலை நிலவரம்
ஜார்கண்டில் இந்தியா கூட்டணி 50 இடங்களிலும், என்டிஏ 30 இடங்களிலும், மற்றவை 1 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
Sat, 23 Nov 202404:42 AM IST
வயநாடு இடைத்தேர்தல் முன்னிலை நிலரவம்
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டார். இந்நிலையில் தற்போது 1,21,476 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
Sat, 23 Nov 202404:37 AM IST
ஜார்கண்ட் தேர்தல் : இந்தியா கூட்டணி முன்னிலை!
ஜார்கண்டில் இந்தியா கூட்டணி 42 இடங்களிலும், என்டிஏ 28 இடங்களிலும், மற்றவை 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
Sat, 23 Nov 202404:25 AM IST
மகாராஷ்டிரா முன்னிலை நிலவரம்
மகாராஷ்டிராவில் என்டிஏ 144, இந்தியா கூட்டணி 75 மற்றவை 6 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
Sat, 23 Nov 202404:24 AM IST
வயநாடு இடைத்தேர்தல் முன்னிலை நிலரவம்
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டார். இந்நிலையில் தற்போது 80,464 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
Sat, 23 Nov 202404:21 AM IST
ஜார்கண்ட் தேர்தல் முன்னிலை நிலவரம்
ஜார்கண்டில் இந்தியா கூட்டணி 32 இடங்களிலும், என்டிஏ 25 இடங்களிலும், மற்றவை 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
Sat, 23 Nov 202404:10 AM IST
வயநாடு இடைத்தேர்தலில் பிரிங்கா காந்தி முன்னிலை!
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டார். இந்நிலையில் தற்போது 57,144 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
Sat, 23 Nov 202404:04 AM IST
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் முன்னனி நிலவரம்
மகாராஷ்டிராவில் என்டிஏ 149, இந்தியா கூட்டணி 33, மற்றவை 7 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
Sat, 23 Nov 202404:20 AM IST
ஜார்கண்ட் தேர்தல் முன்னிலை நிலவரம்
ஜார்கண்டில் என்டிஏ 8 இடங்களிலும், இந்தியா கூட்டணி 13 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
Sat, 23 Nov 202403:50 AM IST
மகாராஷ்டிரா முன்னனி நிலவரம்
மகாராஷ்டிராவில் என்டிஏ 122, இந்தியா கூட்டணி 34, மற்றவை 7 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
Sat, 23 Nov 202403:34 AM IST
மேற்கு வங்கம் : திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை
மேற்கு வங்க மாநிலத்தில் 6 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடந்த நிலையில் 6 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
Sat, 23 Nov 202403:33 AM IST
ஜார்கண்ட் தேர்தல் முன்னிலை நிலவரம்
ஜார்கண்டில் பாஜக கூட்டணி 4 இடங்களிலும், இந்தியா கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
Sat, 23 Nov 202403:25 AM IST
வயநாடு இடைத்தேர்தல் முன்னிலை நிலரவம்
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டார். இந்நிலையில் தற்போது 23,464 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையை பொறுத்த வரை ராகுல் காந்தியை ஒப்பிடும் போது 8000 வாக்குகள் குறைவு
Sat, 23 Nov 202403:19 AM IST
மகாராஷ்டிரா முன்னிலை நிலவரம்
மகாராஷ்டிராவில் என்டிஏ -50, இந்தியா கூட்டணி 28, மற்றவை 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
Sat, 23 Nov 202403:17 AM IST
ஜார்கண்ட் தேர்தல்: பாஜக கூட்டணி முன்னிலை
ஜார்கண்டில் பாஜக கூட்டணி 13 இடங்களிலும் ஜெஎம்எம் கூட்டணி 6 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
Sat, 23 Nov 202403:15 AM IST
மகாராஷ்டிராவில் பாஜக முன்னிலை!
மகாராஷ்டிராவில் பாஜக முன்னிலை
மகாராஷ்டிராவில் பாஜக 46 இடங்களிலும், காங்கிரஸ் 23 இடங்களிலும் மற்றவை 3 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
Sat, 23 Nov 202403:06 AM IST
பிரியங்கா முன்னிலை
வயநாடு இடைத்தேர்தலில் 6411 வாக்குகள் பெற்று பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார்.
Sat, 23 Nov 202403:18 AM IST
மகாராஷ்டிரா முன்னிலை நிலவரம்!
மகாராஷ்டிராவில் என்டிஏ -28, இந்தியா கூட்டணி 14, மற்றவை 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
Sat, 23 Nov 202402:48 AM IST
வய நாட்டில் பிரியங்கா காந்தி முன்னிலை!
வயநாட்டில் நடை பெற்ற இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி முதல் முறையாக களம் கண்ட நிலையில் முன்னிலை வகித்து வருகிறார்.
Sat, 23 Nov 202402:31 AM IST
வயநாடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டுள்ள நிலையில் சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது.
Sat, 23 Nov 202402:30 AM IST
மகாராஷ்டிரா, ஜார்கண்டில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களில் சற்று முன் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது.
Sat, 23 Nov 202402:25 AM IST
மகாராஷ்டிர கூட்டணிகள் விபரம்
மகாராஷ்டிரா தேர்தலில் மகாயுதி, மகா விகாஸ் அகாடி கூட்டணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. பகுஜன் சமாஜ்கட்சி, பகுஜன் விகாஸ் அகாடி, வஞ்சித் பகுஜன் அகாடி, முஸ்லிம் மஜ்லீஸ் உள்ளிட்ட சிறிய கட்சிகளும் களத்தில் உள்ளன.
Sat, 23 Nov 202402:17 AM IST
மகாயுதி Vs மகாவிகாஸ் அகாடி இடையே பலப்பரிட்சை!
மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ் உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணியும் பலப்பரிட்சை நடத்தி உள்ளன. வெற்றி வாய்ப்பு யாருக்கு என்ற கேள்விக்கு இன்னும் சில மணி நேரத்தில் விடை கிடைக்கும்.
Sat, 23 Nov 202402:10 AM IST
பகல் 11 மணிக்கு முன்னிலை நிலவரம்
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மகாராஷ்டிரா ஜார்கண்ட் ஆகிய 2 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடை பெற்று வரும் நிலையில் காலை 11 மணிக்கு முன்னிலை நிலவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sat, 23 Nov 202401:45 AM IST
பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஜார்க்கண்ட்டில் வாக்கு எண்ணிக்கையோட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
Sat, 23 Nov 202402:06 AM IST
வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
இரு மாநிலங்களிலும் பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது
Sat, 23 Nov 202401:44 AM IST
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள்
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் முடிவுகளை இன்னும் சற்று நேரத்தில் அறிந்து கொள்ளலாம்.