Tamil News  /  Nation And-world  /  Madhya Pradesh Cop Suspended After Man, Slapped By Him, Dies By Suicide

கன்னத்தில் அறைந்த கான்ஸ்டபிள்.. தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.. என்ன நடந்தது?

Divya Sekar HT Tamil
Jan 28, 2024 05:08 PM IST

மத்திய பிரதேசத்தில் கன்னத்தில் அறைந்த சம்பவத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 கன்னத்தில் அறைந்த சம்பவத்தில் ஒருவர் தற்கொலை
கன்னத்தில் அறைந்த சம்பவத்தில் ஒருவர் தற்கொலை

ட்ரெண்டிங் செய்திகள்

அறைந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, ரத்லம் காவல்துறை கண்காணிப்பாளர் ராகுல் லோதா பஜ்னா காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட சைபுல்லா கானை இடைநீக்கம் செய்தார்.

கணேஷ் என அடையாளம் காணப்பட்ட இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் நேற்று மாலை பஜ்னா காவல் நிலையத்தில் போராட்டம் நடத்தினர்.

இறந்தவரின் சகோதரர் கூறுகையில், "வியாழக்கிழமை இரவு கன்டோன்மென்ட் ஜோடியா கிராமத்தில் ஒரு திருமணம் நடந்தது. கணேஷ் மற்ற இருவருடன் சாலையோரத்தில் நிற்பது வீடியோவில் காணப்படுகிறது. அப்போது, கான்ஸ்டபிள் சபியுல்லா கான் வந்து கணேஷிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து கான்ஸ்டபிள் கணேஷை மூன்று-நான்கு முறை அறைந்தார். வீடு திரும்பிய கணேஷ் பின்னர் தற்கொலை செய்து கொண்டார்”என தெரிவித்துள்ளார்.

எஸ்பி ராகுல் குமார் லோதா கூறுகையில், "சபியுல்லா கான் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வழக்கு விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்