தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Lok Sabha Elections Phase 7: இமாச்சலப்பிரதேசத்தின் மண்டியில் கங்கனா ரனாவத் வாக்குப்பதிவு!

Lok Sabha Elections Phase 7: இமாச்சலப்பிரதேசத்தின் மண்டியில் கங்கனா ரனாவத் வாக்குப்பதிவு!

Marimuthu M HT Tamil
Jun 01, 2024 11:03 AM IST

Lok Sabha Elections Phase 7:2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் மண்டியில் கங்கனா ரனாவத் வாக்களித்தார். இமாச்சலப் பிரதேசத்தின் உள்ள 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்று '400' தொகுதிகளை பாஜக வெல்ல பங்களிப்பு செய்வேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Lok Sabha Elections Phase 7: இமாச்சலப்பிரதேசத்தின் மண்டியில் கங்கனா ரனாவத் வாக்குப்பதிவு!
Lok Sabha Elections Phase 7: இமாச்சலப்பிரதேசத்தின் மண்டியில் கங்கனா ரனாவத் வாக்குப்பதிவு!

ட்ரெண்டிங் செய்திகள்

7 மாநிலங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகள் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசம் உட்பட 57 மக்களவைத் தொகுதிகளில் இறுதிகட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதியான சனிக்கிழமையான இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. முன்னதாக, ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி 486 மக்களவைத் தொகுதிகளில் 6 கட்டங்களாக, வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் இன்று 7ஆவது கட்டமாக மக்களவைத் தேர்தல் நடந்து வருகிறது. 

2024 மக்களவைத் தேர்தலின் ஏழாவது கட்டத் தேர்தலில், மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தனது சொந்தத் தொகுதியான மண்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். "ஜனநாயகத்தின் திருவிழாவில்" மக்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இமாச்சலப் பிரதேசத்தில் பிரதமர் மோடியின் அலை வீசுகிறது:

இதுதொடர்பாக பேசிய கங்கனா ரனாவத், "நான் இப்போது வாக்களித்துவிட்டேன். ஜனநாயகத்தின் திருவிழாவில் பங்கேற்கவும், வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தவும் மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். இமாச்சலப் பிரதேசத்தில் பிரதமர் மோடியின் அலை வீசுகிறது. மண்டி மக்கள் என்னை ஆசீர்வதிப்பார்கள். இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள 4 இடங்களிலும் பாஜக வெற்றிபெறும் என்று நான் நம்புகிறேன். இமாச்சலப் பிரதேசத்தின் 4 இடங்கள் 400 தொகுதிகளை வெற்றிப் பெறுவதில் பங்களிக்கும்", என்று அவர் கூறினார்.

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதியில் பணக்கார வேட்பாளர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் வேறு யாரும் அல்ல. முந்தைய ராம்பூர் அரச கும்பத்தின் வாரிசும், ஆறுமுறை முதலமைச்சராக இருந்த வீரபத்ர சிங்கின் மகனுமான விக்ரமாதித்யா சிங் தான் அவர். இதனால், பாஜகவின் கங்கனா ரனாவத்துக்கும் விக்ரமாதித்ய சிங்குக்கும் இடையில் தேர்தலில் கடும்போட்டி நிலவுகிறது.

கங்கனா ரனாவாத்தை எதிர்க்கும் ராஜகுடும்ப வாரிசு:

பிரதமர் நரேந்திர மோடி கங்கனா ரனாவத்தின் நட்சத்திர பிம்பம், ராமர் கோயில் தொடர்பாக கங்கனாவின் நிலைப்பாடு ஆகியவற்றினை நம்பி, அவரை களத்தில் வேட்பாளராக இறக்கிவிட்டுள்ளார். விக்ரமாதித்யா தனது தந்தை வீரபத்ர சிங் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவரும் மண்டி தொகுதியின் தற்போதைய எம்.பி.யுமான பிரதீபா சிங்கின் ஆசியுடன், அவரின் பாரம்பரிய ஆதரவாளர்களைப் பெற, இந்த தேர்தலில் களம்கண்டுள்ளார்.

வீரபத்ர சிங் குடும்பத்தின் கோட்டையாக கருதப்படும் மண்டி தொகுதி காங்கிரசுக்கு அடையாள முக்கியத்துவம் வாய்ந்தது.  மறைந்த பாஜக எம்.பி. ராம் ஸ்வரூப் சர்மாவின் மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வீரபத்ர சிங்கின் மனைவி பிரதீபா தேவி சிங் வென்றார்.

மண்டி மக்களவைத் தொகுதியில் 6,98,666 ஆண்கள், 6,78,504 பெண்கள், 3 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 13,77,173 வாக்காளர்கள் உள்ளனர். ஆறு மாவட்டங்களில் அமைந்துள்ள இத்தொகுதியில் 17 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

இமாச்சல பிரதேசத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2019 தேர்தலில் மாநிலத்தில் உள்ள நான்கு மக்களவைத் தொகுதிகளையும் வென்ற பாஜக, இந்த முறையும் வெற்றிக்கான ஒரு கண்ணை வைத்துள்ளது.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்