Lok Sabha Election 2024 Results: வாக்கு எண்ணிக்கையை நேரலையில் எங்கு, எப்படி பார்ப்பது?
Lok Sabha election 2024: மக்களவைத் தேர்தல், ஆந்திரா, ஒடிசா மாநில சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கும்.

Lok Sabha Election 2024 Results: வாக்கு எண்ணிக்கையை நேரலையில் எங்கு, எப்படி பார்ப்பது? (AFP)
செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் முடிவுகளின் மீதுதான் அனைவரின் பார்வையும் இருக்கும். 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
ஏப்ரல் 19 (கட்டம் 1), ஏப்ரல் 26 (கட்டம் 2), மே 7 (கட்டம் 3), மே 13 (கட்டம் 4), மே 20 (கட்டம் 5), மே 25 (கட்டம் 6) மற்றும் ஜூன் 1 (கட்டம் 7) வாக்குப் பதிவுகள் நடந்தது. தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியிடப்படும்.
மக்களவைத் தேர்தல், ஆந்திரா, ஒடிசா மாநில சட்டப்பேரவைகள் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.