மாசிமகத்தையொட்டி புதுச்சேரி, காரைக்காலுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  மாசிமகத்தையொட்டி புதுச்சேரி, காரைக்காலுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

மாசிமகத்தையொட்டி புதுச்சேரி, காரைக்காலுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

Kathiravan V HT Tamil
Published Feb 27, 2025 02:21 PM IST

அன்றைய தினம் தேர்வுகள் இருந்தால் வழக்கம் போல நடைபெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாசிமகத்தையொட்டி புதுச்சேரி, காரைக்காலுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
மாசிமகத்தையொட்டி புதுச்சேரி, காரைக்காலுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 

வரும் மார்ச் 13ஆம் தேதி அன்று காரைக்கால் மாவட்டத்திற்கும், மார்ச் 14ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அன்றைய தினம் தேர்வுகள் இருந்தால் வழக்கம் போல நடைபெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆண்டுதோறும் மாசி மகம் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வைத்திக்குப்பம் கடற்கரையில் ஆண்டு தோறும் நடைபெறும் விழாவில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான கோயில்களை சேர்ந்த உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிப்பர்.

மேலும் படிக்க:- சீமான் பங்களாவில் போலீஸ் உடன் பணியாளர்கள் மோதல்! மன்னிப்பு கேட்டார் கயல்விழி! நடந்தது என்ன?

வைத்திக்குப்பம் கடற்கரையில் திருவிழா

ஒரே இடத்தில் பல்வேறு கோயில்களின் உற்சவர்களும் எழுந்தருள்வதால் புதுச்சேரி மட்டுமின்றி தமிழ்நாட்டில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாசி மகத்திற்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.  வைத்திக்குப்பம் கடற்கரையில் நடக்கும் மாசிமகம் தீர்த்தவாரி விழாவையொட்டி பக்கதர்கள் வசதி மற்றும் பாதுகாப்புக்காக பல்வேறு ஏற்பாடுகளை அரசு நிர்வகம் செய்து வருகிறது. திருட்டு, மோதல் போன்ற அசம்பாவிதங்களை தடுக்க சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க:- ’விசாரணைக்கு என்னால் வர முடியாது! உன்னால் என்ன செய்ய முடியும்!’ போலீசுக்கு சீமான் சவால்!

மாசிமகம் என்றால் என்ன?

மாசிமகம் என்பது தமிழ் மரபில் ஒரு முக்கியமான ஆன்மீக திருவிழா ஆகும். இது தமிழ் மாதமான மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் நிகழும் நாளில் கொண்டாடப்படுகிறது. பௌர்ணமி தினமான இந்த நாளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள பழமை வாய்ந்த கோயில்களில் தீர்த்தவாரி, அபிஷேகங்கள், உற்சவங்கள், திருவிழாக்கள் நடைபெறும். 

கடல், ஆறு, ஏரிகள் போன்ற புனித நீர்தலங்களில் தீர்த்தவாரி, ஆலயங்களில் விசேஷ பூஜைகள், அபிஷேகம், ஹோமங்கள், பல்வேறு கோவில்களில் உற்சவமூர்த்திகள் சிறப்பு வாகனங்களில் ஊர்வலம் வரும் நிகழ்வுகள் உண்டாகும். குறிப்பாக காஞ்சிபுரம், சிதம்பரம், கும்பகோணம், புதுச்சேரி, மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் மாசிமகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.