தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Lk Advani To Be Conferred Bharat Ratna: Pm Modi

Bharat Ratna: ’பாகிஸ்தானில் பிறந்தவர்! ரத யாத்திரையை நடத்தியவர்!’ யார் இந்த எல்.கே.அத்வானி!

Kathiravan V HT Tamil
Feb 03, 2024 03:06 PM IST

”Bharat Ratna: எல்.கே.அத்வானியின் ரத யாத்திரை தேசிய அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த நிலையில் பாஜகவை கொண்டு சென்றது ய்”

பிரதமர் நரேந்திர மோடி உடன் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி
பிரதமர் நரேந்திர மோடி உடன் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி

ட்ரெண்டிங் செய்திகள்

1990 களின் முற்பகுதியில் அயோத்தியின் ராமர் கோயிலுக்கான தனது ரத யாத்திரையின் மூலம் பாஜகவை தேசிய அளவில் உயர்த்திய பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானிக்கு இந்தியாவின் மிக உயர்ந்த சிவில் விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "எல்.கே.அத்வானி ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கௌரவத்தை பெற்றதற்காக நான் அவருடன் பேசி வாழ்த்தினேன்" என பதிவிட்டுள்ளார். 

இந்த விருதை அறிவித்த பிரதமர் மோடி, இந்தியாவின் வளர்ச்சியில் எல்.கே.அத்வானியின் பங்கு மகத்தானது. அவர் அவரை இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவர் என்று கூறி உள்ளார். 

"நம் காலத்தின் மிகவும் மரியாதைக்குரிய அரசியல்வாதிகளில் ஒருவர், இந்தியாவின் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மகத்தானது. அடிமட்டத்தில் பணியாற்றுவதில் தொடங்கி, துணைப் பிரதமராக நாட்டுக்கு சேவை செய்தது வரையிலான வாழ்க்கை அவருடையது. நமது உள்துறை அமைச்சராகவும், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராகவும் அவர் தன்னை தனித்துவப்படுத்திக் கொண்டார். அவரது நாடாளுமன்ற தலையீடுகள் எப்போதும் முன்மாதிரியானவை, வளமான நுண்ணறிவுகள் நிறைந்தவை" என்று எல்.கே.அத்வானிக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.

 யார் இந்த எல்.கே.அத்வானி?

பாக்கிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சியில் பிறந்த எல்.கே.அத்வானி பிரிவினைக்குப் பிறகு இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார். பம்பாயில் குடியேறினார். 

1941-ம் ஆண்டு தனது பதினான்கு வயதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 

1951 ஆம் ஆண்டில், பாஜகவின் சியாமா பிரசாத் முகர்ஜியால் நிறுவப்பட்ட பாரதிய ஜன சங்கத்தில் உறுப்பினரானார். ஜனசங்கம் பாஜகவின் அரசியல் முன்னோடியாக இருந்தது.

அத்வானி 1970ஆம் ஆண்டு முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினரானார். 1989 வரை நான்கு முறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார்.

பொதுத் தேர்தலில் ஜனதா கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 1977 ஆம் ஆண்டில் முதன்முதலில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராகவும், மாநிலங்களவையில் அவை தலைவராகவும் ஆனார்.

பாஜகவின் நிறுவன உறுப்பினர்களில் இவரும் ஒருவர். மூன்று முறை கட்சியின் தலைவராக பதவி வகித்தார்.

1989 ஆம் ஆண்டில், அவர் முதல் முறையாக மக்களவை உறுப்பினரானார்.

1999-ல் வாஜ்பாய் ஆட்சி அமைத்தபோது, அத்வானி உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் பதவி வகித்தார்.

2015 ஆம் ஆண்டில், எல்.கே.அத்வானிக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் கௌரவமான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

பாஜகவின் வளர்ச்சியில் எல்.கே.அத்வானியின் பங்கு

1990-ம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையை எதிர்த்து ராமர் ரத யாத்திரையை அத்வானி தொடங்கினார். குஜராத்தின் சோம்நாத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு அயோத்தியை அடைந்தது. அவரது ரத யாத்திரைக்கு மக்கள் ஆதரவு கிடைத்தது. 1991 பொதுத் தேர்தலில், தேசிய அரசியலில் ஒரு சிறிய பங்களிப்பை வகித்த பாஜக, நாடாளுமன்றத்தில் காங்கிரஸுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கட்சியாக மாற இது காரணமாக அமைந்தது. 

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட எல்.கே.அத்வானிக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

WhatsApp channel

டாபிக்ஸ்