தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Lion Cub Dies And Trending News For National And World On September 23

Lion Cub Dies: குஜராத்தில் ரயில் மோதி சிங்கக்குட்டி பலி - முக்கிய செய்திகள்

Karthikeyan S HT Tamil
Sep 23, 2022 05:07 PM IST

ரயில் மோதி சிங்கக்குட்டி உயிரிழப்பு, ஆந்திர அரசின் முடிவுக்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் எதிர்ப்பு உள்பட பல முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பிஎஃப்ஐயின் கடையடைப்பு போராட்டத்தில் அரசுப் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

கம்போடியாவின் கோ தங் தீவு அருகே படகு மூழ்கியதில் ஒருவர் பலியாகியுள்ளனர், 20 பேர் மாயமாகியுள்ளதாக கம்போடிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதுமண தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலம் மொய்ராங் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

குஜராத், அம்ரேலி மாவட்டம் காவட்கா கிராமத்தில் தண்டவாளத்தை கடந்த சிங்கக்குட்டி, ரயில் மோதி உயிரிழந்தது.

ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் போட்டியில் காலிறுதியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார்.

மகாராஷ்டிர மாநிலம் தாணே நகரில் உள்ள குடிமைப் பள்ளியின் வளாகச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ்வில் கடந்த ஜனவரி மாதம் 3 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 11 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

புகையிலைப் பொருள்களைப் போல மதுபாட்டில்களிலும் எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரிய பொது நலன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஊதியம் மற்றும் ஊக்க தொகை குறைப்பு ,பணி நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட புதிய ஊதிய கொள்கையை கைவிட வலியுறுத்தி, பெங்களூரு தலைமை அலுவலகத்தை நோக்கி ஸ்விகி ஊழியர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.

சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 17 நாள்களாக காணாமல்போனவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது.

பேட்டி எடுக்கும்போது ஹிஜாப் அணிய மறுத்ததால் தனியார் தொலைக்காட்சியின் சர்வதேச பத்திரிக்கையாளர் கிறிஸ்டியன் அமன்பூருடனான நேர்காணலை ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ரத்து செய்தார்.

நாட்டில் ஒரு நாளில் புதிதாக 5,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,52,982 ஆக உள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடியால் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி லெபனானின் வங்கிகளை காலவரையின்றி மூட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக வங்கிகள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் கண்ணிறு மல்லம்மா கோயில் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் 4.37 லட்சம் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உக்ரைன் போருக்கு ரஷ்யாவில் 3 லட்சம் பேரை திரட்ட அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டதற்கு எதிராக, ரஷ்யாவின் பல நகரங்களில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மொத்தம் 30 நகரங்களில் 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்